Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதி அடித்துக்கொலை - வாக்குவாதத்தால் ஏற்பட்ட மோதல்

T

The Leader Desk

மார்ச் 22, 2022 • 3:27 AM

எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதி அடித்துக்கொலை - வாக்குவாதத்தால் ஏற்பட்ட மோதல்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கெஸ்பேவவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை இனந்தெரியாத சிலரால் தாக்கப்பட்டு அமைச்சரின் சாரதி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
  • உயிரிழந்தவர் பிலியந்தலை மாவிட்டரை கம்வனவத்தை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
  • அவசர அழைப்புக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
எழுத்து அளவு:


கெஸ்பேவவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை இனந்தெரியாத சிலரால் தாக்கப்பட்டு அமைச்சரின் சாரதி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


உயிரிழந்தவர் பிலியந்தலை மாவிட்டரை கம்வனவத்தை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


தாக்குதலுக்கு உள்ளான குறித்த நபர், பிலியந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


119 அவசர அழைப்புக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


குறித்த சாரதியின் வீட்டின் முன்னால் பாரிய சத்தத்துடன் பல தடவைகள் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து சாரதி வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கெஸ்பேவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...