Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

இலங்கையில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு!

T

The Leader Desk

மார்ச் 21, 2022 • 3:27 PM

இலங்கையில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மீரிகம எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வரிசையில் நின்றிருந்த நபர், எரிபொருளை எடுத்துக் கொண்டு வீடு திரும்புவதற்கு தயாராகிக்கொண்டிருந்த போது மயங்கி வீழ்ந்துள்ளார்.
  • மீரிகம பகுதியை சேர்ந்த 76 வயதுடைய நபர் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார். நாடு முழுவதும் எரிபொருள் வரிசைகளில் காத்திருந்த மூன்று வயோதிபர்கள் கடந்த சில நாட்களில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
  • கடவத்தை சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மூத்த பிரஜை ஒருவர் நேற்று (20) மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
  • கண்டி - யட்டி நுவர பிரதேசத்தில் மண்ணெண்ணெய் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த 71 வயதுடைய முதியவர் சனிக்கிழமை (19) மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
எழுத்து அளவு:

மீரிகம எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வரிசையில் நின்றிருந்த நபர்,  எரிபொருளை எடுத்துக் கொண்டு வீடு திரும்புவதற்கு தயாராகிக்கொண்டிருந்த போது மயங்கி வீழ்ந்துள்ளார்.

மயங்கி வீழ்ந்தவரை உடனடியாக மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மீரிகம பகுதியை சேர்ந்த 76 வயதுடைய நபர் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

நாடு முழுவதும் எரிபொருள் வரிசைகளில் காத்திருந்த மூன்று வயோதிபர்கள் கடந்த சில நாட்களில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடவத்தை சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மூத்த பிரஜை ஒருவர் நேற்று (20) மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

கண்டி - யட்டி நுவர பிரதேசத்தில் மண்ணெண்ணெய் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த 71 வயதுடைய முதியவர் சனிக்கிழமை (19) மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் இன்று மீரிகம பகுதியில் எரிபொருளை கொள்வனவு செய்துவிட்டு திரும்பும் நிலையில் 76 வயதானவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, நேற்றிரவு கம்பஹா - நிட்டம்புவ, ஹொரகொல்ல பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற வாக்குவாதத்தையடுத்து இடம்பெற்ற தாக்குதலில் 29 வயதான இளைஞரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை எரிபொருள் வரிசையில் நின்ற நான்கு பேர் உயிரிழந்துள்ள நிலையில் நாட்டில், நேற்று கொவிட் தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இலங்கையில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு! | Tamil Leader | We Lead the Nation