Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

அத்தியவசிய பொருட்களுக்காக வரிசையில் காத்திருந்து உயிரிழக்கும் மக்கள்!

T

The Leader Desk

மார்ச் 20, 2022 • 1:10 PM

அத்தியவசிய பொருட்களுக்காக வரிசையில் காத்திருந்து உயிரிழக்கும் மக்கள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எரிபொருளைப் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த போதே குறித்த நபர் தவறி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
  • இதேவேளை, நேற்றும் கண்டியில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் 70 வயதுடைய நபர் ஒருவர் மண்ணெண்ணெய்க்காக நீண்ட வரிசையில் காத்திருந்த போது இவ்வாறு விழுந்து உயிரிழந்துள்ளார்.
  • அம்புலன்ஸ் மூலம் கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.
  • உயிரிழந்தவர் உடதலவின்ன பகுதியைச் சேர்ந்த 70 வயதான மொஹமட் இல்லியாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
எழுத்து அளவு:


எரிபொருளைப் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த போதே குறித்த நபர் தவறி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அவர் உடனடியாக ராகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


உயிரிழந்தவர் மாகொல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேவேளை, நேற்றும் கண்டியில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் 70 வயதுடைய நபர் ஒருவர் மண்ணெண்ணெய்க்காக நீண்ட வரிசையில் காத்திருந்த போது இவ்வாறு விழுந்து உயிரிழந்துள்ளார்.


அம்புலன்ஸ் மூலம் கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.


உயிரிழந்தவர் உடதலவின்ன பகுதியைச் சேர்ந்த 70 வயதான மொஹமட் இல்லியாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


இறந்தவர் மண்ணெண்ணெய்க்காக ஏற்கனவே நீண்ட நேரம் கடுமையான வெயில் வரிசையில் காத்திருந்ததாகவும், தொடர்ந்து குறித்த பகுதியில் பெய்த கனமழையின் பின்னர் அவர் விழுந்ததாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.


இதனிடையே இன்று (20) பிற்பகல் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நின்ற ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளமை நாட்டில் மேலும் கவலையை அதிகரித்துள்ளது.

இதேபோல் இரு தினங்களுக்கு முன் மண்ணெண்ணெய்க்காக வரிசையில் காத்திருந்த பெண்மணி ஒருவர் மயங்கிவிழுந்தமை குறிப்பிடத்தக்கது. 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...