Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

“கப்ரால் பதவி நீக்கப்படவுள்ளதாக வெளியான செய்தியில் உண்மையில்லை” - பதறுகிறது அரசு

T

The Leader Desk

மார்ச் 17, 2022 • 6:35 PM

 “கப்ரால் பதவி நீக்கப்படவுள்ளதாக வெளியான செய்தியில் உண்மையில்லை” - பதறுகிறது அரசு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவிற்கமையவும் , பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் விரைவில் பதவி விலகுவார் என சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின.
  • எவ்வாறாயினும் இறுதியில் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லவேண்டிய கட்டாயமத்திற்கு நாடு தள்ளப்பட்டது.
  • இவர்கள் கடந்த 15 ஆம் திகதி நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் தீர்க்கமான சந்திப்புக்களில் ஈடுபட்டிருந்தனர்.
எழுத்து அளவு:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவிற்கமையவும் , பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் விரைவில் பதவி விலகுவார் என சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின.

சர்வதேச நாணய நிதியத்தினை நாடுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் மற்றும் அதன் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து மத்திய வங்கி ஆளுனரை பதவி விலகுமாறு கோரப்பட்டுள்ளதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையிலேயே அதற்கு மறுப்பு தெரிவித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் அவ்வாறு எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி ஊடகப்பிரிவு , நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் மாத்திரமே இதன் போது அவதானம் செலுத்தப்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கம் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் மீது அதீத நம்பிக்கை வைத்திருப்பதாகவும் , அவரை பதவி விலகுமாறு கோருவதற்கு எந்தவொரு காரணியும் இல்லை என்றும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிபுணர்களினால் முன்னரே எதிர்வு கூறப்பட்ட நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை நாடுமாறு பல தரப்பினராலும் தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்ட போதும் அரசாங்கம் இது தொடர்பில் ஸ்திரமானதொரு நிலைப்பாட்டினை அறிவிக்கவில்லை.

எனினும், நாடு நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டும் என்பதால் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற மத்திய வங்கி ஆளுனர் விரும்பவில்லை என செய்திகள் வெளியாகின.

எவ்வாறாயினும் இறுதியில் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லவேண்டிய கட்டாயமத்திற்கு நாடு தள்ளப்பட்டது. இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய, பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி சங்யோன்ங் ரீ, பிரதி பணிப்பாளர் கலாநிதி ஆன் மேரி கல்ட் வூல்ஃ மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான சர்வதேச நாணய நிதியத்தின் வதிவிடப்பிரதிநிதி கலாநிதி டுபாகஸ் ஃபெரிதனுசெட்யவான் ஆகியோர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ வியத்தினை மேற்கொண்டிருந்தனர்.

இவர்கள் கடந்த 15 ஆம் திகதி நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் தீர்க்கமான சந்திப்புக்களில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்தே மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் விரைவில் பதவி விலகுவார் என்ற செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இராஜாங்க அமைச்சராக இருந்த அஜித் நிவார்ட் கப்ரால் தனது பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர், ஆறு மாதங்களுக்கு முன்னர் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

சிரேஷ்ட பட்டய கணக்காளரான இவர் இதற்கு முன்னர் அமைச்சின் செயலாளராகவும், மத்திய வங்கியின் ஆளுநராக சுமார் ஒன்பது ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இதன் காரணமாக நாட்டின் பொருளாதார நிலைமையை சீர் செய்யும் நோக்கில் இவர் குறித்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...