Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

இலங்கையை அதிகமான கடன் சுமையில் தள்ளியவர் மகிந்த - பந்துலவின் அறிக்கையில் வெளியான உண்மை!

T

The Leader Desk

மார்ச் 17, 2022 • 6:08 AM

இலங்கையை அதிகமான கடன் சுமையில் தள்ளியவர் மகிந்த - பந்துலவின் அறிக்கையில் வெளியான உண்மை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அமைச்சர் பந்துல குணவர்தன, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது 2019 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.குறித்த அறிக்கையில் “மகிந்த ராஜபக்ஷ காலத்தில் 2007 ஆம் ஆண்டு முதல் பிணைமுறி பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
  • ல் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இதன் மூலம் பெறப்பட்டது.
  • பின்னர் 2009ல் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெற்றுக்கொள்ளப்பட்டது.
  • ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக்காலம் முடிவடையும் போது, ​​மொத்த வெளிநாட்டு வர்த்தகக் கடன் 12,302 மில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது.
எழுத்து அளவு:

அமைச்சர் பந்துல குணவர்தன, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது 2019 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி  பாராளுமன்றத்தில் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.குறித்த அறிக்கையில் “மகிந்த ராஜபக்ஷ காலத்தில் 2007 ஆம் ஆண்டு முதல் பிணைமுறி பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

2007ல் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இதன் மூலம் பெறப்பட்டது. பின்னர் 2009ல் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெற்றுக்கொள்ளப்பட்டது.

2010ல் 1000 மில்லியன் அமெரிக்க டாலர்களையும், 2011 இல் 1000 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், பின்னர் 2014ல் 1500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 

எட்டு ஆண்டுகளில், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் 5.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான  பிணைமுறி  பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக குறித்த தினத்தில் வெளியிடப்பட்ட ஹன்சார்ட்  (நாடாளுமன்ற நடவடிக்கைத் தொகுப்புகள்) தெரிவித்துள்ளது.

இதன்படி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் பெருமளவிலான சர்வதேச வர்த்தகக் கடன்கள் பெறப்பட்டதை அமைச்சர் பந்துல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார். 

அவர் 2007 முதல் 5.5 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான வணிகக் கடனைப் பெற்றுள்ளார்.2007 ஆம் ஆண்டின் இறுதியில், இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் 2,084 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

2014 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக்காலம் முடிவடையும் போது, ​​மொத்த வெளிநாட்டு வர்த்தகக் கடன் 12,302 மில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது.

அப்போது குறிப்பிடப்பட்ட 5.5 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு பதிலாக தற்போதைய அமைச்சர் பந்துல குணவர்தன உண்மையில் 10.218 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளார். 

இதன்படி, மஹிந்த ராஜபக்சவின் 8 வருட ஆட்சியில் பாரியளவிலான வெளிநாட்டு வர்த்தகக் கடன்கள் பெறப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...