Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபை கூட்டத்திற்கு பின்னர் ரணில் வெளியிடவுள்ள அறிக்கை!

T

The Leader Desk

பிப்ரவரி 15, 2022 • 12:39 PM

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபை கூட்டத்திற்கு பின்னர் ரணில் வெளியிடவுள்ள அறிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த கூட்டத்தின் பின்னர் நாடு தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கு தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் மேற்கொள்ளக்கூடிய அடிப்படை நடவடிக்கைகள் குறித்து நாட்டுக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
  • இந்த விடயத்தில் சுமந்திரனின் ஈடுபாட்டை பாராட்டிய ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிக்கு பாராளுமன்றத்தின் ஊடாக தீர்வு காண அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
  • ​ 12 https://bit.ly/3uHGkH6 13 14 15 16 17 18 19.
எழுத்து அளவு:

இந்த கூட்டத்தின் பின்னர் நாடு தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கு தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் மேற்கொள்ளக்கூடிய அடிப்படை நடவடிக்கைகள் குறித்து நாட்டுக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க  நேற்று (14) பிற்பகல் சிவில் சமூக ஆர்வலர்கள் குழுவை அவரது இல்லத்தில் சந்தித்த போதே இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக பொருளாதார துறையில் தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்கள் பலருடன் கலந்துரையாடியதாகவும், நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகவும் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாட்டை கட்டியெழுப்புவதற்காக இந்த கூட்டத்தின் பின்னர், அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்துவதற்காக  அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களுடனும் மற்றும் பல முக்கிய தொழில்அதிபர்களுடனும் பல சுற்று கலந்துரையாடல்களை நடத்த உள்ளதாக முன்னாள் பிரதமர் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பல இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் அரசாங்கம் ஏன் கையொப்பமிடவில்லை என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வினவிய போது, ​​சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை மற்றும் பொதுக்கடன் மற்றும் கடன் சேவைகள் தொடர்பான அறிக்கைக்கு பின்னர் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அவர் தெரிவித்தார். 

இந்த விடயத்தில்  ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியின் அனைத்து பிரிவினருடனும் கலந்துரையாடி பொதுவான நிலைப்பாட்டை எட்ட வேண்டும்  என்றார்.

இந்த விடயத்தில் சுமந்திரனின் ஈடுபாட்டை பாராட்டிய ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிக்கு பாராளுமன்றத்தின் ஊடாக தீர்வு காண அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.
11
​
12
https://bit.ly/3uHGkH6

13

 

14

15 16

17

18 19

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...