Tamil Leader News
முக்கியம்
தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●
செய்திகள்

தற்காலிகமாக தொழிற்சங்கப் போராட்டத்தை கைவிட சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானம்

T

The Leader Desk

பிப்ரவரி 15, 2022 • 11:24 AM

தற்காலிகமாக  தொழிற்சங்கப் போராட்டத்தை கைவிட சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஒன்பது நாட்களாக சுகாதாரத்துறையுடன் இணைந்த 18 தொழிற்சங்கங்கள் முன்னெடுத்திருந்த தொழிற்சங்கப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளன.அதன்படி நாளை (16) காலை 8.00 மணி முதல் வேலை நிறுத்தம் கைவிடப்படும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
  • தமது ஏழு கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தீர்வுகாணத் தவறியதைக் கண்டித்து அரச சுகாதாரப் பணியாளர்கள் திங்கட்கிழமை (7) காலை 7.00 மணி முதல் காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
  • ​ 12 https://bit.ly/3uHGkH6 13 14 15 16 17 18 19.
எழுத்து அளவு:

ஒன்பது நாட்களாக சுகாதாரத்துறையுடன் இணைந்த 18 தொழிற்சங்கங்கள் முன்னெடுத்திருந்த தொழிற்சங்கப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளன.அதன்படி நாளை (16) காலை 8.00 மணி முதல் வேலை நிறுத்தம் கைவிடப்படும் என தொழிற்சங்கங்கள்  அறிவித்துள்ளன.

எவ்வாறாயினும், தமது கோரிக்கைகள் குறித்து ஜனாதிபதி  தலையிடும்வரை இரண்டு வாரங்களுக்கு வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக இடைநிறுத்த சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.அத்தோடு, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஊடகங்களுக்கு முன் பேசப்பட்ட விடயங்களை திரிபுபடுத்தி, பிரச்சினையை நீண்ட காலமாக இழுத்தடிப்பு  செய்து வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தமது பிரச்சினைகளுக்க ஏற்றுக்கொள்ளும்வகையிலான தீர்வுகளை ஜனாதிபதி வழங்கத் தவறினால், எந்த நேரத்திலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தயங்க மாட்டோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

18 தொழிற்சங்கங்களில் ஒன்றான தாதியர் உத்தியோகத்தர் சங்கம், அண்மையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு காரணமாக வார இறுதியில் தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக கைவிடுவதற்கு  தீர்மானித்திருந்தது.

தமது ஏழு கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தீர்வுகாணத் தவறியதைக் கண்டித்து அரச சுகாதாரப் பணியாளர்கள் திங்கட்கிழமை (7) காலை 7.00 மணி முதல் காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

 

10

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.
11
​
12
https://bit.ly/3uHGkH6

13

 

14

15 16

17

18 19

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...