Tamil Leader News
முக்கியம்
தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●
செய்திகள்

சட்டத்தரணி அம்பிகா சத்குணநாதன் மீதான அறிக்கைக்கு எட்டு மனித உரிமைக் குழுக்கள் கண்டனம்!

T

The Leader Desk

பிப்ரவரி 15, 2022 • 3:53 AM

 சட்டத்தரணி அம்பிகா சத்குணநாதன் மீதான அறிக்கைக்கு எட்டு மனித உரிமைக் குழுக்கள் கண்டனம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து சத்குணநாதன் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பேசியிருந்தார்.
  • “அரசாங்க அறிக்கை, துன்புறுத்தல் மற்றும் மிரட்டல் போன்ற செயலை தெளிவாகக் கொண்டுள்ளது.
  • இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் வெளியிட்ட அறிக்கை துன்புறுத்தலுக்கும் அச்சுறுத்தலுக்கும் சமமானது என குறித்த எட்டு மனித உரிமைக் குழுக்கள் தெரிவித்துள்ளன.
எழுத்து அளவு:

இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து சத்குணநாதன் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பேசியிருந்தார். இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் வெளியிட்ட அறிக்கை துன்புறுத்தலுக்கும் அச்சுறுத்தலுக்கும் சமமானது என குறித்த எட்டு மனித உரிமைக் குழுக்கள் தெரிவித்துள்ளன. “அரசாங்க அறிக்கை, துன்புறுத்தல் மற்றும் மிரட்டல் போன்ற செயலை தெளிவாகக் கொண்டுள்ளது.

மனித உரிமைப் பாதுகாவலர்களை அச்சுறுத்தும் இலங்கை அரசாங்கத்தின் தந்திரோபாயங்களை நாங்கள் கண்டிக்கிறோம்” என குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் நன்கு அறியப்பட்ட, மரியாதைக்குரிய மற்றும் தைரியமான மனித உரிமைப் பாதுகாவலரான சத்குணநாதனுக்கு தமது முழு ஒத்துழைப்பை வெளிப்படுத்துவதோடு, ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து துல்லியமான சாட்சியத்தை வழங்கியதற்காக அவரை இலக்கு வைப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் வலியுறுத்தியுள்ளது.

ஏற்கனவே நிர்ப்பந்தத்தின் கீழ் இயங்கி வரும் அனைத்து இலங்கை சிவில் சமூகத்திற்கும் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் உள்ளவர்களுக்கும் இந்த அறிக்கை ஊடாக தற்போதைய அரசாங்கம் ஒரு எச்சரிக்கையை விடுப்பதாக உள்ளது என எட்டு மனித உரிமைகள் குழுக்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்னெஸ்டி இன்டர்நேஷனல், மனித உரிமைகள் மற்றும் மேம்பாட்டுக்கான ஆசிய மன்றம் (FORUM-ASIA), FIDH, முன்னணி வரிசை பாதுகாவலர்கள், மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச நீதிபதிகள் ஆணையம், அனைத்து வகையான பாகுபாடு மற்றும் இனவெறிக்கு எதிரான சர்வதேச இயக்கம் (IMADR) மற்றும் சித்திரவதைக்கு எதிரான உலக அமைப்பு (OMCT ) உள்ளிட்டவை இந்த கூட்டு அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...