Tamil Leader News
முக்கியம்
வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●
செய்திகள்

இனப்பிரச்சினை தீர்வின் போது மக்களின் அபிலாஷைகளையும் உள்வாங்கப்பட வேண்டும்!

T

The Leader Desk

பிப்ரவரி 15, 2022 • 3:43 AM

இனப்பிரச்சினை தீர்வின் போது மக்களின் அபிலாஷைகளையும் உள்வாங்கப்பட வேண்டும்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அட்டனில் நேற்று (14) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
  • இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை என்பது 30 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துச்செல்கின்றது.
  • இப்பிரச்சினைக்கான தீர்வாக இந்தியாவின் தலையீட்டுடன் 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டு, மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன.
  • எனவே, 30 வருடங்கள் கடந்தும் அதிகாரப் பகிர்வு நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருக்கின்றது என்பது தற்போது உறுதியாகியுள்ளது.
எழுத்து அளவு:

அட்டனில் நேற்று (14) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

"இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இந்தியா சென்று, அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கருடன் பேச்சு நடத்தினார். இதன்போது அதிகாரப்பகிர்வின் அவசியத்துவம் பற்றி இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக இந்திய அரசுக்கும், வெளிவிவகார அமைச்சருர் சுப்ரமணியம் ஜெய்சங்கருக்கும் இலங்கையிலுள்ள தமிழ் பேசும் கட்சிகளின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை என்பது 30 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துச்செல்கின்றது. இப்பிரச்சினைக்கான தீர்வாக இந்தியாவின் தலையீட்டுடன் 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டு, மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன. எனவே, 30 வருடங்கள் கடந்தும் அதிகாரப் பகிர்வு நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருக்கின்றது என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களின் உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும், சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பாகும். அன்று வடக்கு, கிழக்கு பிரச்சினை பற்றியே கூடுதல் கரிசணை கொள்ளப்பட்டது. எனவே ,87 காலப்பகுதியில் மலையகத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாஷைகள் அதிகாரப்பகிர்வு பொறிமுறைக்குள் உள்வாங்கப்படவில்லை.

இலங்கையில் தமிழ் பேசும் மக்களுள் மூன்று இனங்கள் உள்ளன. மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் ஈழத் தமிழர்கள். எனவே, அதிகாரப்பகிர்வு பொறிமுறையின்போது இம்மூன்று இன மக்களின் அபிலாஷைகளும் உள்ளடக்கப்பட வேண்டும். அதற்கான அழுத்தம் இந்திய தரப்பில் இருந்து விடுக்கப்பட வேண்டும்." - என்றார்.

https://tamilwin.com/article/the-situation-in-the-country-is-dire-1644791496

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.


தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...