Tamil Leader News
முக்கியம்
தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●
செய்திகள்

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம் - வைத்தியருக்கு விளக்கமறியல்

T

The Leader Desk

பிப்ரவரி 14, 2022 • 12:07 PM

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம் - வைத்தியருக்கு விளக்கமறியல்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று (14) மீண்டும் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்ட போதே கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய இந்த உத்தரவை பிறப்பித்தார்.
  • குறித்த தேவாலயத்தில் கடந்த மாதம் 12 ஆம் திகதி கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஓய்வுபெற்ற வைத்தியர் ஷெர்லி தயானந்த ஹேரத் பிலியந்தலை பகுதியில் வைத்து கடந்த மாதம் 19 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார்.
  • வைத்தியரின் தனியார் சிகிச்சை நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றி வந்த எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதான சந்தேக நபர் வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைய இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
எழுத்து அளவு:


சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று (14) மீண்டும் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்ட போதே கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய இந்த உத்தரவை பிறப்பித்தார்.


சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை என கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
குறித்த தேவாலயத்தில் கடந்த மாதம் 12 ஆம் திகதி கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஓய்வுபெற்ற வைத்தியர் ஷெர்லி தயானந்த ஹேரத் பிலியந்தலை பகுதியில் வைத்து கடந்த மாதம் 19 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார்.


வைத்தியரின் தனியார் சிகிச்சை நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றி வந்த எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதான சந்தேக நபர் வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைய இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.


கைக்குண்டை கொள்வனவு செய்வதற்கு தேவையான பணத்தை வைத்தியரே வழங்கியுள்ளதாக சந்தேகநபர் விசாரணைகளின் போது தெரிவித்தார்.


பிலியந்தலை மாவட்ட வைத்தியசாலையில் சேவையாற்றிய பின்னர் ஓய்வுபெற்ற வைத்தியர் குறித்த பகுதியில் உள்ள தனது தனியார் சிகிச்சை நிலையத்தை நடத்தி வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...