Tamil Leader News
முக்கியம்
வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●
செய்திகள்

இந்தியாவிடம் கையேந்தும் இலங்கை மின்சார சபை

T

The Leader Desk

பிப்ரவரி 14, 2022 • 7:26 AM

இந்தியாவிடம் கையேந்தும் இலங்கை மின்சார சபை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாடு டொலர் நெறுக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் இலங்கை மின்சார சபைக்கு எரிபொருளை விநியோகிக்க முடியாது என வலுசக்தி அமைச்சு அறிவித்திருந்தது.
  • இது தொடர்பான அனைத்து கலந்துரையாடல்களும் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக இடம்பெற்றதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளரும் பிரதிப் பொது முகாமையாளருமான ஏ.ஆர்.நவமணி தெரிவித்தார்.
  • இதன்காரணமாக நாளாந்தம் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில் நாளை செவ்வாய்க்கிழமை (15) பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியை கோருவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.
எழுத்து அளவு:

நாடு டொலர் நெறுக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் இலங்கை மின்சார சபைக்கு எரிபொருளை விநியோகிக்க முடியாது என வலுசக்தி அமைச்சு அறிவித்திருந்தது. இந்நிலையில் லங்கா IOC நிறுவனத்திடமிருந்து நேரடியாக எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு இலங்கை மின்சார சபை  நடவடிக்கை மேற்கொண்டது.

எனினும் எரிபொருள் இன்மையால் இலங்கை மின்சார சபைக்கு தொடர்ந்தும் எரிபொருள் விநியோகிக்க முடியாது என லங்கா IOC நிறுவனம் கடந்த மாதம் நடுப்பகுதியில் அறிவித்திருந்தது.

கடுமையான பொருளாதார நெறுக்கடியில் சிக்கித்தவிக்கும் நாட்டு மக்கள் தொடர் மின்வெட்டை சந்திக்க நேரிடுமானால் பொருளாதாரத்திற்கும் வாழ்வாதாரத்திற்கும் மற்றொரு பேர் இடியாகும்.

இந்த நிலைமையை சமாளிக்கவே, லங்கா IOC நிறுவனத்திடமிருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் இலங்கை மின்சார சபை இறங்கியுள்ளது.

இது தொடர்பான அனைத்து கலந்துரையாடல்களும் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக இடம்பெற்றதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளரும் பிரதிப் பொது முகாமையாளருமான ஏ.ஆர்.நவமணி தெரிவித்தார்.

இதனிடையே, எரிபொருள் பற்றாக்குறையினால் களனிதிஸ்ஸ மற்றும் மத்துமக மின்னுற்பத்தி நிலையத்தின் உற்பத்தி  நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர் அன்ரூ நவமணி இன்று ஊடகங்களுக்கு  தெரிவித்தார்.

அத்தோடு நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையினால் நீர் மின் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் இது தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிப்பதில் சிக்கல் நிலைமை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்காரணமாக நாளாந்தம் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில் நாளை செவ்வாய்க்கிழமை (15) பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியை கோருவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.



தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...