Tamil Leader News
முக்கியம்
வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●
செய்திகள்

இலங்கை எதிர்பார்த்த முழுமையான நல்லிணக்கத்தை நிறைவேற்றவில்லை - அமைதிக்கான உலக உச்சி மாநாட்டில்

T

The Leader Desk

பிப்ரவரி 14, 2022 • 5:10 AM

இலங்கை எதிர்பார்த்த முழுமையான நல்லிணக்கத்தை நிறைவேற்றவில்லை - அமைதிக்கான உலக உச்சி மாநாட்டில்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மே, இல் இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக செயற்பட்ட பான் கீ மூன் அமைதி, நல்லிணக்கம், நிலைமையை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்துவதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ததாக சிறிசேன கூறினார்.
  • எனினும் சர்வதேச சமூகம் எதிர்பார்க்கும் மிகவும் புரட்சிகரமான மற்றும் உடனடி தீர்வு நடவடிக்கைகளை உள்ளடக்கிய நல்லிணக்க பொறிமுறைகளை செயல்படுத்துவதில் நாடு பின்வாங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
  • இலங்கையில் 25 ஆண்டுகளுக்கும் மேலான யுத்தம் காரணமாக, ஆழமாக வேரூன்றியுள்ள வடுக்களை ஆற்றுவதற்கு இன்னும் அதிக காலம் தேவை, எனவே, பொறுமை அவசியம் எனவும் அவர் அடிக்கோடிட்டார்."எங்கள் மோதல் மே 2009 இல் முடிவடைந்தது.
எழுத்து அளவு:

2009 மே, இல் இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக செயற்பட்ட பான் கீ மூன் அமைதி, நல்லிணக்கம், நிலைமையை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்துவதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ததாக சிறிசேன கூறினார்.

" முரண்பாடுகள் எந்தவொரு பிறழ்வுகளுக்கும் விடையாக இருக்கக்கூடாது. அவ்வாறான தருணத்தில் நமக்குத் தேவைப்படுவது கட்சிகளுக்கு இடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதும் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதும் ஆகும்,” என அவர் மேலும் தெரிவித்தார்.

நாடு தற்போது சர்வதேச ரீதியில் எதிர்பார்க்கப்படும் “நல்லிணக்கத்தின் நான்கு தூண்களை” அடிப்படையாகக் கொண்டு, நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எனினும் சர்வதேச சமூகம் எதிர்பார்க்கும் மிகவும் புரட்சிகரமான மற்றும் உடனடி தீர்வு நடவடிக்கைகளை உள்ளடக்கிய நல்லிணக்க பொறிமுறைகளை செயல்படுத்துவதில் நாடு பின்வாங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் 25 ஆண்டுகளுக்கும் மேலான யுத்தம் காரணமாக, ஆழமாக வேரூன்றியுள்ள வடுக்களை ஆற்றுவதற்கு இன்னும் அதிக காலம் தேவை, எனவே, பொறுமை அவசியம் எனவும் அவர் அடிக்கோடிட்டார்."எங்கள் மோதல் மே 2009 இல் முடிவடைந்தது. இன்னும், பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் நாங்கள் உறுதியான அதிகாரப் பகிர்வு பொறிமுறையைக் கண்டுபிடிக்கவில்லை அல்லது சர்வதேச தரத்தின்படி எதிர்பார்க்கப்பட்ட மொத்த நல்லிணக்கத்தை நிறைவேற்றவில்லை." என்றார்.

ஜேர்மனி மற்றும் வியட்நாம் நாடுகளின் தற்போதைய நிலைமைகளை எடுத்துக்காட்டிய அவர் இலங்கையும் இது போன்ற முன்மாதிரிகளை பின்பற்றலாம் எனவும் கூறினார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...