Tamil Leader News
முக்கியம்
'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●
செய்திகள்

அமைச்சரின் வீட்டில் இடம்பெற்ற மரணம் குறித்த உண்மையை வெளிப்படுத்துமாறுகோரி மலையகத்தில் ஆர்ப்பாட்டம்!

T

The Leader Desk

ஜூலை 20, 2021 • 11:54 AM

அமைச்சரின் வீட்டில் இடம்பெற்ற மரணம் குறித்த உண்மையை வெளிப்படுத்துமாறுகோரி மலையகத்தில் ஆர்ப்பாட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜூலை 18, ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற இந்த போராட்டத்தை மலையக மக்கள் முன்னணியும், மலையகத் தொழிலாளர் முன்னணியும் ஏற்பாடு செய்திருந்தன.
  • ஜூலை 17 ம் திகதி,பொரல்ல பொலிசார் முன்னாள் அமைச்சரின் ஊழியரை அவரது வீட்டில் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் விசாரித்தனர்.
  • மரணித்த சிறுமி ஹட்டன் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் வசிப்பவர் என்றும் முன்னாள் அமைச்சரின் வீட்டிற்கு 15 வயது 11 மாத வயதில் ஒரு ஊழியராக அழைத்து வரப்பட்டார் என்றும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
எழுத்து அளவு:

ஜூலை 18, ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற இந்த போராட்டத்தை மலையக மக்கள் முன்னணியும், மலையகத் தொழிலாளர் முன்னணியும் ஏற்பாடு செய்திருந்தன.

wathukaraya 2021.07.20

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் குடும்ப உறுப்பினர்கள் மீது பொரெல்ல பொலிசார் சமீபத்தில் விசாரணை நடத்தியிருந்தனர், அவர் முன்னாள் அமைச்சரின் வீட்டில் பணியாளராக பணிபுரிந்து கொண்டிருந்தபோது சிறுமியை தீ வைத்துக் கொலை செய்துள்ளார்களா?அல்லது சிறுமி தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை இடம்பெற்று வருகின்றது.

விசாரணையை நடத்திய பொரெல்ல மருத்துவமனையின் மரண விசாரனை அதிகாரி தற்கொலை செய்து கொண்ட சிறுமி சில காலமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜூலை 17 ம் திகதி,பொரல்ல பொலிசார் முன்னாள் அமைச்சரின் ஊழியரை அவரது வீட்டில் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் விசாரித்தனர்.

மரணித்த சிறுமி ஹட்டன் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் வசிப்பவர் என்றும் முன்னாள் அமைச்சரின் வீட்டிற்கு 15 வயது 11 மாத வயதில் ஒரு ஊழியராக அழைத்து வரப்பட்டார் என்றும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

 

பெண்களுக்கு எதிரான அனைத்து வன்முறைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கக் கோரிய ஹட்டன் நகரில் எதிர்ப்பாளர்கள், சிறுவர்கள் பணிக்கமர்த்துவது சிறுவர்களின் உரிமை மீறல் என்று சுட்டிக்காட்டினர்.

கொழும்பு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தோட்டப் பகுதிகளில் உள்ள சிறிவர்கள் மற்றும் இளம் பெண்கள் ஏராளமானோர் பணியாற்றுகின்றனர்.

சிறுமியின் மரணம் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், குற்றங்களுக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும், இதுபோன்ற குற்றங்கள் எதிர்காலத்தில் சிறுவர்களுக்கு ஏற்படாதவாறு  தண்டனை வழங்கப்படவேண்டும் என்று மலையக மக்க்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...