Tamil Leader News
முக்கியம்
'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●
செய்திகள்

சீனாவின் தடுப்பூசியால் மூன்று பேர் நேற்று பதவி விலகல்!

T

The Leader Desk

ஜூலை 18, 2021 • 4:35 PM

சீனாவின் தடுப்பூசியால் மூன்று பேர் நேற்று பதவி விலகல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சீனாவின் தடுப்பூசியான சினோவாக்கை இலங்கையில் பயன்படுத்த தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு ஒப்புதல் அளித்த பின்னர் இவர்கள் பதவி விலகியுள்ளனர்.
  • , ஜூன் 9 அன்று, இலங்கையில் பயன்படுத்த குறைந்தபட்சம் 2 மில்லியன் சினோவாக் குப்பிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட வேண்டுமா என்று தீர்மானிக்கும் அவசர கூட்டத்தில், ஆலோசனை நிபுணர் குழு இரண்டாக பிரிவடைந்தது.
  • எனினும் மற்ற குழு அதனை ஏற்கவில்லை.
  • இதேவேளை இலங்கையில் சினோவாக்கின் 13 மில்லியன் குப்பிகளை இறக்குமதி செய்வதற்கான நகர்வுகள் இருப்பதாக கொழும்பின் ஊடகம் கூறியுள்ளது.
எழுத்து அளவு:

சீனாவின் தடுப்பூசியான சினோவாக்கை இலங்கையில் பயன்படுத்த தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு ஒப்புதல் அளித்த பின்னர் இவர்கள் பதவி விலகியுள்ளனர்.

நோயெதிர்ப்பு நிபுணர் வைத்தியர் ராஜீவ டி சில்வா, வைராலஜிஸ்ட் வைத்தியர் காந்தி நாணயக்கார மற்றும் சுவாச மருத்துவர் பேராசிரியர் சன்ன ரணசிங்க ஆகியோரே பதவி விலகியுள்ளனர்.

செய்வதற்கான தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் புறக்கணிப்பு மற்றும் தடுப்பூசி ஆலோசனைக் குழுவின் விஞ்ஞான அறிவியல் ஆலோசனைகள் மீறிப்பட்டமை காரணமாகவே தாம் பதவி விலகியுள்ளதாக கொழும்பின் ஊடகம் ஒன்று கூறியுள்ளது.

பதவி நீக்குதல், விலகல் மற்றும் புதிய உறுப்பினர்கள் நியமித்தல் உள்ளிட்ட பிரச்சனைகளில் இந்த ஆலோசனைக் குழு தொடர்ந்தும் சிக்கியுள்ளது.

2021, ஜூன் 9 அன்று, இலங்கையில் பயன்படுத்த குறைந்தபட்சம் 2 மில்லியன் சினோவாக் குப்பிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட வேண்டுமா என்று தீர்மானிக்கும் அவசர கூட்டத்தில், ஆலோசனை நிபுணர் குழு இரண்டாக பிரிவடைந்தது. அந்த கூட்டத்தில் சினோவாக் "குறைவான பயனுள்ள தடுப்பூசி" என்று அந்த கூட்டத்தில் முழு குழுவும் ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில் ஒரு குழு சினோவாக்கின் குறிப்பிட்ட தொகையை இறக்குமதி செய்ய நிபந்தனைகளுடன் "வரையறுக்கப்பட்ட" ஒப்புதல் வழங்கப்பட வேண்டும் என்று கூறியது. எனினும் மற்ற குழு அதனை ஏற்கவில்லை. சினோவாக் இரண்டு அளவைப் பெற்று ஆறு மாதங்களுக்குப் பிறகு, மற்றும் ஒரு ஊக்கியும் தேவைப்படும் என்று சினோவாக் ஆவணங்கள் தெளிவாகக் கூறியுள்ளன.

உலக சுகாதார அமைப்பு (WHO) சினோவாக்கிற்கான அவசரகால பயன்பாட்டு பட்டியலை (EUL) வழங்கியுள்ளது. சீனாவின் தடுப்பூசிகளை மேற்கத்திய உற்பத்திகளுடன் கலந்து செலுத்தப்போவதாக ஏனைய தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூறியுள்ளதால், மலேசியாவின் சுகாதார அமைச்சகம் அதன் தற்போதைய கையிருப்பு முடிந்தவுடன் சினோவாக் பயன்படுத்துவதை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றின்படி சினோவாக்கின் முதல் அளவை பெற்றவர்களுக்கு எஸ்ட்ராசெனெகாவை கொடுக்க தாய்லாந்து தயாராக உள்ளது; சீனாவில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளையும், மேற்கு உற்பத்தியாளர்களால் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகளையும் கலந்து பொருத்தும் திட்டத்தை தாய்லாந்து அறிவித்துள்ளது;

கடுமையான பரவலால் பாதிக்கப்பட்ட இந்தோனேசியா, சினோவாக்கின் இரண்டு அளவுகளுடனும் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு மேலதிக ஊக்கி ஒன்றை செலுத்த எதிர்பார்க்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான லொன்செட் மைக்ரோப் இதழில் வெளியிடப்பட்ட ஹொங்காங் பல்கலைக்கழகத்தின் ஒரு குழு மேற்கொண்ட ஆய்வின் படி இது சினோவாக் கொடுக்கப்பட்டவர்களுக்கு “மாற்று உத்திகள்” (பூஸ்டர் டோஸ்) தேவைப்படலாம் என்று கூறியுள்ளது. ஃபைசர் தடுப்பூசியுடன் ஒப்பிடும்போது, ​​சினோவாக் தடுப்பூசி என்டிபொடி(பிறப்பொருள் எதிரி )அளவை நடுநிலையாக்கும் ஒரு “குறிப்பிடத்தக்க” குறைந்த அளவையே வெளிப்படுத்தியது. சிலியிலும் மருத்துவ சோதனை ஆய்வாளர்கள் மூன்றாவது அளவை பரிந்துரைத்தனர்.

இதேவேளை இலங்கையில் சினோவாக்கின் 13 மில்லியன் குப்பிகளை இறக்குமதி செய்வதற்கான நகர்வுகள் இருப்பதாக கொழும்பின் ஊடகம் கூறியுள்ளது. 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சீனாவின் தடுப்பூசியால் மூன்று பேர் நேற்று பதவி விலகல்! | Tamil Leader | We Lead the Nation