இந்நிலையில், கசிந்த எண்ணெயை விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை போர்ட் சர்வீசஸ் தலைமை நிர்வாக அதிகாரி ரவி ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த மாதம் எக்ஸ்-பிரஸ் பேர்ல் என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் தீவிபத்திற்கு உள்ளானதை அடுத்து 170க்கும் மேற்பட்ட ஆமைகள், 20 டொல்பின்கள் மற்றும் 4 திமிங்கிலங்கள் உயிரிழந்த நிலையில், கரையொதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


