Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

வெலிகடை படுகொலையில் முக்கிய சாட்சிக்கு மீண்டும் மரண அச்சுறுத்தல்!

T

The Leader Desk

ஜூலை 13, 2021 • 5:25 AM

வெலிகடை படுகொலையில் முக்கிய சாட்சிக்கு மீண்டும் மரண அச்சுறுத்தல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இனந்தெரியாத இரண்டு நபர்கள் ஜூலை 7ஆம் திகதி மாளிகாவத்தையில் உள்ள லக்கிரு செவன புகையிரத குடியிருப்பில் வசிக்கும் சுதேஷ் நந்திமல் சில்வாவின் அயல் வீட்டுக்காரர்களிடம் அவர் எங்கு செல்கின்றார்?
  • சட்டத்தரணி சேனக பெரேரா சுதேஷ் நந்திமல் சில்வாவின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த முயற்சிப்பவர்களையும், அவர்களின் நலனுக்காக செயற்படுவோரையும் உடனடியாக அடையாளம் கண்டு, அவரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு வலியுறுத்தியுள்ளது.
  • நவம்பர் 9, 2012ஆம் ஆண்டு, ஆயுதமேந்திய பாதுகாப்புப் படையினர் வெலிகடை சிறைச்சாலையில் நுழைந்ததால், 27 கைதிகள் கொல்லப்பட்டதோடு, குறைந்தது 40 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

இனந்தெரியாத இரண்டு நபர்கள் ஜூலை 7ஆம் திகதி  மாளிகாவத்தையில் உள்ள லக்கிரு செவன புகையிரத குடியிருப்பில் வசிக்கும் சுதேஷ் நந்திமல் சில்வாவின் அயல் வீட்டுக்காரர்களிடம் அவர் எங்கு செல்கின்றார்? என்ன செய்கின்றார்? போன்ற விபரங்களை கேட்டறிந்துள்ளதாக அந்த அமைப்பின், தலைவர், சட்டத்தரணி சேனக பெரேரா ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த விடயமானது எதிர்காலத்தில் சுதேஷ் நந்திமல் சில்வாவின் உயிருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை வெளிக்காட்டுவதாக அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

sudesh Nadimal

சுதேஷ் நந்திமல் சில்வா

இது தொடர்பாக காவல்துறையினரிடம் ஏற்கனவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தாக கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது.

"CIB 1/117/42 என் எண்ணின் கீழ், அதேநாளில் நாளில் (2021.07.07) தெமடகொட காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, இந்த சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு நபர்களிடம் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.”

இந்த சம்பவம் குறித்த காட்சிகள் அடங்கிய சிசிரிவி காணொளிக் காட்சிகள் விசாரணைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவர் சட்டத்தரணி  சேனக பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

 118588897 4e7eda54 beba 40f1 9032 dfa6300b03b3

சட்டத்தரணி சேனக பெரேரா

சுதேஷ் நந்திமல் சில்வாவின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த முயற்சிப்பவர்களையும், அவர்களின் நலனுக்காக செயற்படுவோரையும் உடனடியாக அடையாளம் கண்டு, அவரை  பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு வலியுறுத்தியுள்ளது.

2012 வெலிகடை சிறைச்சாலை படுகொலைக்கு சாட்சியாக இருப்பதாலும், பொதுவெளியில் அரசாங்கத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளை விமர்சிப்பதாலும் சுதேஷ் நந்திமல் கடந்த காலத்தில் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு உள்ளானதாக சட்டத்தரணி சேனக பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும், சுதேஷ் நந்திமால் தற்காலிகமாக தங்கியிருந்த அவரது சகோதரியின் வீட்டிற்கு அடையாளம் தெரியாத குழுவு ஒன்று கடந்த காலத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய விடயத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மரண அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் சுதேஷ் நந்திமல் சில்வா, கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் பொதுச் செயலாளராகவும் செயற்படுகின்றார்.

நவம்பர் 9, 2012ஆம் ஆண்டு, ஆயுதமேந்திய பாதுகாப்புப் படையினர் வெலிகடை சிறைச்சாலையில் நுழைந்ததால், 27 கைதிகள் கொல்லப்பட்டதோடு, குறைந்தது 40 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

வெலிகடை படுகொலையில் முக்கிய சாட்சிக்கு மீண்டும் மரண அச்சுறுத்தல்! | Tamil Leader | We Lead the Nation