Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

ஊடகவியலாளருக்கு சிவில் உடை தரித்து நின்ற பொலிஸ் அதிகாரியினால் இடையூறு!

T

The Leader Desk

ஜூலை 12, 2021 • 5:48 PM

ஊடகவியலாளருக்கு சிவில் உடை தரித்து நின்ற பொலிஸ் அதிகாரியினால் இடையூறு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாக கிராமங்கள் தோறும் சௌபாக்கியா கிராம நிகழ்ச்சித்திடம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.
  • அந்தவகையில் நாளைய தினம் (13) வவுனியா சாந்தசோலையில் சௌபாக்கியா பன்னீர் உற்பத்திக் கிராம நிகழ்சித்திட்டம் அங்குரார்ப்பான நிகழ்வு இடம்பெறவுள்ளது.
  • இந்நிகழ்வை ஏற்பாடு செய்வதற்காக அங்கு சென்ற பொதுமக்களை அநுராதபுரத்திலிருந்து வந்த புகையிரதத்திணைக்கள உத்தியோகத்தர்கள் தடுத்து அவர்களது கடமைகளை செய்யவிடாமல் தடுக்கப்பட்டனர்.
எழுத்து அளவு:

ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாக கிராமங்கள் தோறும் சௌபாக்கியா கிராம நிகழ்ச்சித்திடம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் நாளைய தினம் (13) வவுனியா சாந்தசோலையில் சௌபாக்கியா பன்னீர் உற்பத்திக் கிராம நிகழ்சித்திட்டம் அங்குரார்ப்பான நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வை ஏற்பாடு செய்வதற்காக அங்கு சென்ற பொதுமக்களை அநுராதபுரத்திலிருந்து வந்த புகையிரதத்திணைக்கள உத்தியோகத்தர்கள் தடுத்து அவர்களது கடமைகளை செய்யவிடாமல் தடுக்கப்பட்டனர்.

இவ்வியடம் குறித்து அப்பகுதி கிராம அலுவலகர் ஊடாக பிரதேச செயலாளருக்கு அறிவிக்கப்பட்டது இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பிரதேச செயலாளர் புகையிரதத்திணைக்கள உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடி நாளை இடம்பெறவுள்ள நிகழ்வுகளை தடுப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகளை முறியடித்துள்ளார்.

இந்நிலையில் அச்சம்பவங்களைச் சேகரிப்பதற்காக சென்ற ஊடகவியலாளரின் கடமைகளுக்கு அங்கு சிவில் உடையிலிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் இடையூறுகளை ஏற்படுத்தி அச்சுறுத்தும் நடவடிக்கையையும் மேற்கொண்டார்.

இவ்வாறு பொலிசார் சிவில் உடைகளில் வந்து பொதுமக்களின் தகவல்களை சேகரிக்கும் ஊடகவியலாளர்களின் கடமைகளுக்கு இடையூறுகளையும் அச்சுறுத்தும் நடவடிக்கைகளையும் தடுத்து நிறுத்துவதற்குரிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்படுவதற்குரிய நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு என்பன எடுக்கப்படவேண்டும். 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...