Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

பட்டினியால் இறக்கும் கடற்பசுக்கள்! அமெரிக்காவில் சோகம்

T

The Leader Desk

ஜூலை 12, 2021 • 5:40 PM

பட்டினியால் இறக்கும் கடற்பசுக்கள்! அமெரிக்காவில் சோகம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • புளோரிடா அருகில் உள்ள கடற்பகுதியில் கடந்த ஜனவரி 1 முதல் ஜூலை 2 வரை குறைந்தது 841 கடற்பசுக்கள் இறந்துள்ளன.
  • இதற்கு முன்பு கடந்த 2013-ம் ஆண்டு நச்சு பாசி காரணமாக 830 கடற்பசுக்கள் இறந்ததே அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது.
  • அமெரிக்கா வெப்பம் அதிகரித்து வருவதால், அட்லாண்டிக் கடற்கரையில் கடற்பசுக்கள் இடம்பெயர்ந்து செல்கின்றன.
  • இந்த ஆண்டில் இதுவரை 63 கடற்பசுக்கள் படகு மோதி இறந்துள்ளன.
எழுத்து அளவு:

புளோரிடா அருகில் உள்ள கடற்பகுதியில் கடந்த ஜனவரி 1 முதல் ஜூலை 2 வரை குறைந்தது 841 கடற்பசுக்கள் இறந்துள்ளன.

இதற்கு முன்பு கடந்த 2013-ம் ஆண்டு நச்சு பாசி காரணமாக 830 கடற்பசுக்கள் இறந்ததே அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது.

கடற்பசுக்கள் உணவுக்காக நம்பியிருக்கும் கடலடியில் உள்ள புற்கள், கடல் மாசு காரணமாக அழிந்து வருகிறது என உயிரியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புளோரிடாவின் கடற்கரைகளில் அதிகரித்து வரும் கழிவு மாசுபாடுதான் முக்கிய பிரச்சினை என்று அவர்கள் கூறுகிறார்கள். இதனால், கடலடியில் உள்ள புற்கள் வேகமாக அழிந்து வருகின்றன.

சென்னை கடற்கரையில் நீல நிறத்தில் ஒளிர்ந்த அலைகள் - காரணம் என்ன?

கொத்து கொத்தாக இறந்து கரை ஒதுங்கிய மீன்கள் - மன்னார் வளைகுடாவில் நடந்தது என்ன?

பெரும்பாலான மரணங்கள் குளிர் கால மாதங்கள் ஏற்படுகின்றன என்றும், கடற்பசுக்கள் உணவு தேடி இந்தியன் நதி லகூனுக்கு இடம்பெயர்ந்து சென்ற போது அங்கு பெரும்பாலான கடலடி புற்கள் அழிந்திருந்தன என்றும் புளோரிடாவின் மீன் மற்றும் வனவிலங்கு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா

வெப்பம் அதிகரித்து வருவதால், அட்லாண்டிக் கடற்கரையில் கடற்பசுக்கள் இடம்பெயர்ந்து செல்கின்றன. இதன் காரணமாகக் கடந்த மாதம் அதிகளவிலான உயிரினங்கள் படகு மோதி இறந்துள்ளது என தரவுகள் கூறுகின்றன.

இந்த ஆண்டில் இதுவரை 63 கடற்பசுக்கள் படகு மோதி இறந்துள்ளன. படகுகள் மோதுவது இந்த கடல் வாழ் உயிரினங்களுக்கு ஒரு முக்கிய ஆபத்தாக உள்ளதாக ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.

கடற்பசுக்களை அச்சுறுத்தலில் இருக்கும் உயிரினமாகக் கடந்த 2017-ம் ஆண்டு அமெரிக்க அறிவித்தது. ஆனால், இதனைப் பாதுகாக்கத் தீவிர நடவடிக்கை தேவை என ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

புளோரிடா கடலில் கிட்டதட்ட 6,300 கடற்பசுக்கள் வாழுவதாக அரசு கூறுகிறது. சமீபத்திய மாதங்களில், புளோரிடாவில் உள்ள கடல் உயிரியலாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கடற்பசுக்கள் இறப்பது குறித்து அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பட்டினியால் இறக்கும் கடற்பசுக்கள்! அமெரிக்காவில் சோகம் | Tamil Leader | We Lead the Nation