Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

அடக்குமுறைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஹபயாகோபுஸ் மணு!

T

The Leader Desk

ஜூலை 12, 2021 • 5:20 PM

அடக்குமுறைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஹபயாகோபுஸ் மணு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பின்னர் ஜூலை 8ம் திதி கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது 33 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • பின்னர் அவர்களில் 16 பேர் வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தலுக்கு அனுப்பட்டனர்.
  • இதன் முதற் கட்டமாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஹபயாஸ்கோபுஸ் மனு இன்று (12) தாக்கல் செய்யப்பட்டது.
எழுத்து அளவு:

பின்னர் ஜூலை 8ம் திதி கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது 33 பேர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அவர்களுக்கும் பிணை வழங்கப்பட்டது. பின்னர் அவர்களில் 16 பேர் வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தலுக்கு அனுப்பட்டனர்.

இந்த அடக்குமுறைக்கு எதிராக அரசியல் செயற்பாட்டாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் கல்வி துறையைச் சார்ந்தவர்கள் மற்றும் சட்டத்துறையை சேர்ந்தவர்கள் கூடியளவு நடவடிக்கை முன்வந்துள்ளனர்.

மக்களின் உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் மீது மேற்கொள்ளப்படும் அடக்குமுறை செயல்களுக்கு எதிராகவும் பொலிஸாரின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளுக்கு எதிராகவும், கட்டாய தனிமைப்படுத்தலுக்கு எதிராகவும் சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. இந்த வாரத்திற்குள் ஹபயாஸ்கோபுஸ் மனுக்கள், அடிப்படை மனித உரிமை மீறல் சம்பந்தமான மனுக்கள் மற்றும் அநீதியான தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு எதிரான மனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன.

இதன் முதற் கட்டமாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஹபயாஸ்கோபுஸ் மனு இன்று (12) தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், கட்டாய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறும், இலவசக் கல்வியை பாதுகாக்குமாறும், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக கொழும்பில் இன்று ஆர்ப்பாட்மொன்றும் நடைபெற்றது.

ஜூலை மாதம் 7ம் திகதி பொறியியல் கூட்டத்தாபன ஊழியர்களின் பிரச்சினைக்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர் போராட்ட நிலையத்தின ஒருங்கிணைப்பாளர் துமிந்த நாகமுவ உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டதன் பின்னர் தனிமைப்படுத்தல் சட்டத்தை பயன்படுத்தி பொலிஸாரால் கடத்தப்பட்டனர்.

பின்னர் ஜூலை 8ம் திதி கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது 33 பேர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அவர்களுக்கும் பிணை வழங்கப்பட்டது. பின்னர் அவர்களில் 16 பேர் வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தலுக்கு அனுப்பட்டனர்.

இந்த அடக்குமுறைக்கு எதிராக அரசியல் செயற்பாட்டாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் கல்வி துறையைச் சார்ந்தவர்கள் மற்றும் சட்டத்துறையை சேர்ந்தவர்கள் கூடியளவு நடவடிக்கை முன்வந்துள்ளனர்.

மக்களின் உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் மீது மேற்கொள்ளப்படும் அடக்குமுறை செயல்களுக்கு எதிராகவும் பொலிஸாரின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளுக்கு எதிராகவும், கட்டாய தனிமைப்படுத்தலுக்கு எதிராகவும் சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. இந்த வாரத்திற்குள் ஹபயாஸ்கோபுஸ் மனுக்கள், அடிப்படை மனித உரிமை மீறல் சம்பந்தமான மனுக்கள் மற்றும் அநீதியான தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு எதிரான மனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன.

இதன் முதற் கட்டமாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஹபயாஸ்கோபுஸ் மனு இன்று (12) தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், கட்டாய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறும், இலவசக் கல்வியை பாதுகாக்குமாறும், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக கொழும்பில் இன்று ஆர்ப்பாட்மொன்றும் நடைபெற்றது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

அடக்குமுறைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஹபயாகோபுஸ் மணு! | Tamil Leader | We Lead the Nation