Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

வீரவன்சவையும், கம்மன்பிலவையும் அரசாங்கத்தில் இருந்து அப்புறப்படுத்தப்போகிறார்களா?

T

The Leader Desk

ஜூலை 11, 2021 • 2:35 PM

வீரவன்சவையும், கம்மன்பிலவையும் அரசாங்கத்தில் இருந்து அப்புறப்படுத்தப்போகிறார்களா?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அவ்விருவரிடமிருந்தும் மாற்றப்படும் அமைச்சின் விடயதானங்களுக்கு அமைய,ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு மேலும் 3 அமைச்சுகளை வழங்குவதற்கு ஆலோசித்து வருவதாகவும் அறியமுடிகின்றது.
  • அதன் நிமிர்த்தமே அமைச்சர்களான உதயகம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோரிடமிருக்கும் அமைச்சுகளின் விடயதானங்களை பகிர்வதற்கு அரசாங்கம் கலந்தாலோசிப்பதாக அறியமுடிகின்றது.
  • நிதியமைச்சராக பெசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதன் பின்னர், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களை விரைவுப்படுத்தி, இலக்கை எட்டிக்கொள்வதற்கு புதிய அமைச்சரவை மாற்றமொன்றை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது.
எழுத்து அளவு:

அவ்விருவரிடமிருந்தும் மாற்றப்படும் அமைச்சின் விடயதானங்களுக்கு அமைய,ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு மேலும் 3 அமைச்சுகளை வழங்குவதற்கு ஆலோசித்து வருவதாகவும் அறியமுடிகின்றது.

நிதியமைச்சராக பெசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதன் பின்னர், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களை விரைவுப்படுத்தி, இலக்கை எட்டிக்கொள்வதற்கு புதிய அமைச்சரவை மாற்றமொன்றை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது.

அதனடிப்படையில், ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் கீழான ஒப்பந்தங்களின் அடிப்படையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கப்படவேண்டிய அமைச்சுப் பதவிகளை, அக்கட்சிக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் நிமிர்த்தமே அமைச்சர்களான உதயகம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோரிடமிருக்கும் அமைச்சுகளின் விடயதானங்களை பகிர்வதற்கு அரசாங்கம் கலந்தாலோசிப்பதாக அறியமுடிகின்றது.

இந்நிலையில், அரசாங்கத்தால் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கும் அமைச்சுகளை பொறுப்பேற்றுக்கொள்வதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது.

இதேவேளை புதிய அமைச்சவை மாற்றத்தில், சுகாதாரம், பொலிஸ், தொழில் மற்றும் கல்வி ஆகிய அமைச்சுக்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுமென தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

வீரவன்சவையும், கம்மன்பிலவையும் அரசாங்கத்தில் இருந்து அப்புறப்படுத்தப்போகிறார்களா? | Tamil Leader | We Lead the Nation