Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

அட்டாளைச்சேனையிலிருந்து கடலுக்குச் சென்ற இரு மீனவர்கள் மாயம்!

T

The Leader Desk

ஜூலை 11, 2021 • 12:54 PM

அட்டாளைச்சேனையிலிருந்து கடலுக்குச் சென்ற இரு மீனவர்கள் மாயம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அட்டாளைச்சேனை 07 ஆம் பிரிவினை வசிப்பிடமாகக் கொண்ட அப்துல் றசீட் றிஸ்வான் (32 வயது), வாழைச்சேனையினைப் பிறப்படமாகவும், மூதூரை வசிப்படமாகவும் கொண்ட அப்துல் காசிம் முனவ்வர் (32 வயது) ஆகியோரே காணாமல் போயுள்ளனர்.
  • காணாமற்போன இரு மீனவர்களும் அட்டாளைச்சேனை கப்பலடி கடற் பகுதியில் இருந்து அட்டாளைச்சேனை பிரதேசத்தினைச் சேர்ந்த ஜவாஹிர் முகம்மட் றிஸ்வி என்பவருக்குச் சொந்தமான இயந்திரப் படகில் வெள்ளிக்கிழமை (09) பிற்பகல் நான்கு மணியளவில் ஆழ்கடலுக்குச் சென்றுள்ளனர்.
  • கடற்பகுதியில் பலத்த காற்று வீசி வருவதனால் இவர்களின் படகு காற்றில் அள்ளுண்டு செல்லப்பட்டிருக்கக் கூடும் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
எழுத்து அளவு:

அட்டாளைச்சேனை 07 ஆம் பிரிவினை வசிப்பிடமாகக் கொண்ட அப்துல் றசீட் றிஸ்வான் (32 வயது), வாழைச்சேனையினைப் பிறப்படமாகவும், மூதூரை வசிப்படமாகவும் கொண்ட அப்துல் காசிம் முனவ்வர் (32 வயது) ஆகியோரே காணாமல் போயுள்ளனர்.

காணாமற்போன இரு மீனவர்களும் அட்டாளைச்சேனை கப்பலடி கடற் பகுதியில் இருந்து அட்டாளைச்சேனை பிரதேசத்தினைச் சேர்ந்த ஜவாஹிர் முகம்மட் றிஸ்வி என்பவருக்குச் சொந்தமான இயந்திரப் படகில் வெள்ளிக்கிழமை (09) பிற்பகல் நான்கு மணியளவில் ஆழ்கடலுக்குச் சென்றுள்ளனர்.

இவர்களைத் தேடும் பணியில் கடற்தொழில் அமைச்சு உத்தியோகத்தர்கள், கடற்படையினர், மீனவர்கள் மற்றும் துறைசார்ந்தோர் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வழக்கமாக மாலை வேளையில் கடலுக்குச் சென்றவர்கள் மறுநாள் காலை வேளையில் இருப்பிடம் நோக்கி திரும்பியிருக்க வேண்டும். கடற்பகுதியில் பலத்த காற்று வீசி வருவதனால் இவர்களின் படகு காற்றில் அள்ளுண்டு செல்லப்பட்டிருக்கக் கூடும் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு இரவுப் பொழுதில் மட்டும் ஆழ்கடலில் தரித்து நின்று மீன்பிடித் தொழில் ஈடுபட்டு வருவதனை வழமையாக்கிக் கொண்ட இவர்கள், ஒரு நாளுக்குப் போதுமான எரிபொருள், குடிநீர் மற்றும் உணவுப் பொருட்கள் போன்றவற்றை கொண்டு சென்றுள்ளதாக இவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில தினங்களாக கடற்கரைப் பிரதேசத்தில் பலத்த காற்று வீசி வருவதனால் அம்பாறை மாவட்டத்தில் மீன்பிடி நடவடிக்கை ஸ்தம்பித்த நிலையிலேயே காணப்படுகின்றது.

பலத்த காற்று வீசுவதனால் மீன்பிடித் தொழில் வெகுவாகப் பாதித்து தாம் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...