Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

கதிர்காமம், உகந்தை முருகன் ஆலயங்களின் கொடியேற்றம் இன்று!

T

The Leader Desk

ஜூலை 10, 2021 • 12:06 PM

கதிர்காமம், உகந்தை முருகன் ஆலயங்களின் கொடியேற்றம் இன்று!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆறுபடைவீடு கொண்ட திருமுருகனின் ஏழாவது படைவீடாகத் திகழ்வது கதிர்காமத் திருத்தலம்.
  • இது 2000ஆண்டுகள் பழைமைவாய்ந்த திருத்தலம்.
  • முருகனுக்கு உகந்த மலை உகந்​தைமலை என்பர்.
  • மட்டக்களப்பு, கல்முனை, அக்கரைப்பற்று, பொத்துவில், பாணமை ஊடாகச் சென்று பின்னர் வனத்தினூடாக 17கி.மீ.
எழுத்து அளவு:

ஆறுபடைவீடு கொண்ட திருமுருகனின் ஏழாவது படைவீடாகத் திகழ்வது கதிர்காமத் திருத்தலம். இது இலங்கையில் புகழ்பெற்ற திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையையும் உடையது.

கதிர்காமம் ஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

கதிர்காமம் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற புனித பாதயாத்திரைத் தலம். இந்துக்கள்,பௌத்தர்களுக்குரிய புகழ் பெற்ற வழிபாட்டுத் தலம் இதுவாகும்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என முச்சிறப்பு வாய்ந்த கதிர்காமத்திருத்தலம் இனமதபேதமற்று இந்துக்களும் பௌத்தர்களும் சங்கமிக்கும் புனித பூமியாகும். அதேவேளை வெளிநாட்டவர்களையும் தன்னகத்தே ஈர்க்கும் திருத்தலமாகும்.

கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழா உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.

இதேவேளை மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் மூன்று மலைக்கோயில்கள் உள்ளன. தாந்தாமலை, சங்கமண்கண்டிமலை, உகந்​தை மலை ஆகியன இவையாகும். இவற்றுள் மிகவும் தொன்மை வாய்ந்தது உகந்தை மலை. இது 2000ஆண்டுகள் பழைமைவாய்ந்த திருத்தலம்.

முருகனுக்கு உகந்த மலை உகந்​தைமலை என்பர். திரைச்சீலை திறக்காமல் பூசைகள் நடைபெறும் ஆலயம் இது. மலை உச்சியில் ஏழு வற்றாத நீர்ச்சுனைகள் இருப்பது இவ்வாலயத்திற்கு மேலும் வனப்பூட்டவதாக உள்ளது.

இராவணன் பூகாரம்பம் செய்து பாவம் தீர்த்த ஆலயம் இது. இங்கு தலவிருட்சமாக வெள்ளைநாவல் மரம் உள்ளது. இது மலையடிவாரத்தில் உள்ளது.

மட்டக்களப்பு, கல்முனை, அக்கரைப்பற்று, பொத்துவில், பாணமை ஊடாகச் சென்று பின்னர் வனத்தினூடாக 17கி.மீ. சென்றால் மனோரம்மியமான சூழலில் இயற்கையாக அமையப்பெற்றுள்ள உகந்​தைமலையை அடையலாம்.

பொத்துவிலையடுத்துள்ள லகுகலை பிரதேச செயலாளர் பிரிவில் உகந்தைமலை முருகனாலயம் அமைந்துள்ளது.

கிழக்கே ஆர்ப்பரிக்கும் கடல் சூழ அடர்ந்த வனாந்தரம், நீர்நிலைகள் மத்தியில் கிறங்க வைக்கும் மலைத்தொடர். தொடர்ந்து வீசும் தென்றல். இத்தகைய மனோரம்மியமான சூழலில் அமைந்துள்ள உகந்​தைமலையில் வடிவேல் குன்றமும் நீர்ச்சுனைகளும் மக்களை கவர்ந்திழுக்கின்றன.

குன்றம் எறிந்த குமரவேல் தனது உடல் பெருக்கி வாழ்வு உயர்த்திநின்ற அவுணகுல மன்னனை உரங்கிழித்தபின்னர் எறிந்த வேலானது பல்பொறிகளாகியதென்றும் மீண்டுவந்த அத்தகைய வேற்படைக்கதிர்களில் முதன்மையானது இங்கே (உகந்த) தங்கிற்று என்றும் ஐதீகம் கூறுகின்றது.

இன்று முதல் தொடர்ந்து 15நாட்கள் திருவிழா நடைபெறும்.15நாள் திருவிழாவின் பின்னர் எதிர்வரும் 24ஆம் திகதி சனிக்கிழமை தீர்த்தோற்சவம் இடம்பெறும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கதிர்காமம், உகந்தை முருகன் ஆலயங்களின் கொடியேற்றம் இன்று! | Tamil Leader | We Lead the Nation