Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

இராணுவமயமாக்கலுக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்கு சர்வதேச எதிர்ப்பு!

T

The Leader Desk

ஜூலை 10, 2021 • 11:52 AM

இராணுவமயமாக்கலுக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்கு சர்வதேச எதிர்ப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • "தொழிற்சங்கவாதிகள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் மீது இலங்கை அரசாங்கத்தின் அருவருப்பான தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம்.
  • ஒரு போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட துமிந்த நாகமுவ உள்ளிட்ட பலர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த கடந்த 7ஆம் திகதி பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
  • போராட்டக்காரர்கள் கைது கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டத்திற்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம், முன்னிலை சோசலிஸகட்சி மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய உறுப்பினர்கள் ஜூலை 8 வியாழக்கிழமை காலை நாடாளுமன்ற சுற்றுவட்டம் அருகே போராட்டம் நடத்தியது.
  • பௌத்த பிக்குகள் மற்றும் வயதான பெண்கள் உட்பட 30ற்கும் மேற்பட்ட செயற்பாட்டாளர்களை பொலிஸார் கைது செய்து, தொற்றுநோய் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியது.
எழுத்து அளவு:

"தொழிற்சங்கவாதிகள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் மீது இலங்கை அரசாங்கத்தின் அருவருப்பான தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம். இலங்கை தொழிலாளர்கள் மற்றும் இடதுசாரிகளுடனான எங்கள் ஒற்றுமை இத்தகைய கடினமான சூழ்நிலைகளில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது ”என அவுஸ்திரேலியா - விக்டோரியாவில் செயற்படும் சோசலிஸ அமைப்பு, சமூக ஊடகத்தின் ஊடாக தெரிவித்துள்ளது.

Screenshot 2021 07 08 at 23.19.35

நீதிமன்றம் பிணை வழங்கிய பின்னர் அவர்கள் அழைத்துச் செல்லப்படும் இடத்தையேனும் அறிவிக்காமல், காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அவர்களை அழைத்துச் சென்றதாக அவர்கள் சார்பு சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.

நாடளாவிய ரீதியில் செயற்படும் ஆசிரியர் சங்கத்தின் தலைவரும், சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவருமான ஜோசப் ஸ்டாலின் உட்பட சுமார் 30 பேர் நீதிமன்றத்தில் இருந்து துறைமுக காவல்நிலையத்திற்கு பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில்,  "நீண்ட பயணத்திற்கு" தயாராகுமாறு காவல்துறையினர் அவர்களிடம் கூறியுள்ளனர்.

213068240 3035872076644572 6688921523862163850 n

ஜோசப் ஸ்டாலின்

எவ்வாறாயினும், குறைந்தது அவர்கள் அழைத்து செல்லப்படும் இடத்தைப் பற்றிய தகவலைக்கூட வழங்காமல், அவர்களில் எவருக்கும் படுக்கையைத் தவிர மாற்று உடைகளை எடுக்கவேனும் அனுமதிக்கப்படவில்லை என களத்தில் இருந்த ஊடகவியலாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, தொற்றுநோய் சட்டங்களை மீறியதாகக் கூறி கொழும்பில் உள்ள ஒரு ஹோட்டலில் விருந்துபசார நிகழ்வை நடத்திய ஒரு நடிகை உள்ளிட்ட குழுவிற்கு "அனுதாபத்துடன்" வசதிகளை வழங்கியிருந்த அரசாங்கம், உயர்கல்வியை இராணுவமயமாக்குவதை எதிர்த்தமையால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவில்லை.

பிரபல நடிகை பியுமி ஹன்சமாலி உள்ளிட்ட ஒரு குழுவை தனிமைப்படுத்தலுக்காக காவல்துறையினர் அழைத்துச் சென்றபோது, அவர்களுக்குத் தேவையான ஆடைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை காவல் நிலையத்திற்குள்ளேயே கிடைக்கச் செய்வதில்,  காவல்துறை பொறுப்பான அமைச்சரே தலையீடு செய்திருந்தார்.

"இலங்கை காவல்துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற அடிப்படையில் பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளை அனுதாபத்துடன் பரிசீலித்ததாகவும், தலையிட்டதாகவும்” பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரின் ஊடக செயலாளர் பின்னர் ஒரு அறிக்கை ஊடாக தெறிவித்திருந்தார்.

எவ்வாறெனினும், நேற்றைய தினம் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட தரப்பிற்கு எதிராக எந்தவொரு சட்டத்தையும் நடைமுறைப்படுத்தியதாக தெரியவில்லை.

ஒரு போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட துமிந்த நாகமுவ உள்ளிட்ட பலர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த கடந்த 7ஆம் திகதி பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

போராட்டக்காரர்கள் கைது

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டத்திற்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம், முன்னிலை சோசலிஸகட்சி மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய உறுப்பினர்கள் ஜூலை 8 வியாழக்கிழமை காலை நாடாளுமன்ற சுற்றுவட்டம் அருகே போராட்டம் நடத்தியது.

இலவச கல்விக்கான உரிமையைப் பாதுகாப்பதற்கும் இராணுவமயமாக்கலுக்கும் எதிராக 'இலவச கல்விக்கான மாணவர் இயக்கம்' இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

194995746 10222684740780627 6673171389037834585 n

பௌத்த பிக்குகள் மற்றும் வயதான பெண்கள் உட்பட 30ற்கும் மேற்பட்ட செயற்பாட்டாளர்களை பொலிஸார் கைது செய்து, தொற்றுநோய் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியது.

கொழும்பு  மேலதிக நீதவான் காஞ்சனா நிரஞ்சனா டி சில்வா சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார். அவர்களைத் தனிமைப்படுத்த வெலிகடை காவல்துறை நீதிமன்றத்திடம் அனுமதி கோரியபோது, அவர்களைத் தனிமைப்படுத்த நீதிமன்றத்திற்கு எவ்வித அதிகாரமும் இல்லை என நீதவான் தெரிவித்திருந்தார்.

எனினும், நீதிமன்றத்திற்கு வெளியே அரசியல் மற்றும் தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தலுக்கு அழைத்துச் சென்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...