Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

இல்லாத அதிகாரத்தை செயற்படுத்தியமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்! துமிந்த நாகமுவ

T

The Leader Desk

ஜூலை 9, 2021 • 6:31 AM

இல்லாத அதிகாரத்தை செயற்படுத்தியமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்! துமிந்த நாகமுவ

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நேற்று முன்தினம் (07) கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் பலவந்தமாக தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
  • கருத்துச் சுதந்திரம் எந்த அதிகாரமும் இல்லாதவர்களால் பறிக்கப்படுகிறது.
  • அந்த தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து தொலைபேசி மூலம் கருத்து தெரிவித்த துமிந்த நாகமுவ, பல்வேறு காரணங்களைக் காட்டி, அடக்குமுறை பலத்தைக் கொண்டு,உரிமைகளுக்காக மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டங்களை அரசாங்கம நிறுத்துவதாகவும், இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாதெனவும் கூறினார்.
எழுத்து அளவு:

நேற்று முன்தினம் (07) கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் பலவந்தமாக தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அந்த தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து தொலைபேசி மூலம் கருத்து தெரிவித்த துமிந்த நாகமுவ, பல்வேறு காரணங்களைக் காட்டி, அடக்குமுறை பலத்தைக் கொண்டு,உரிமைகளுக்காக மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டங்களை அரசாங்கம நிறுத்துவதாகவும், இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாதெனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தற்போது கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் உட்பட சில தொழிற்சங்கத் தலைவர்களையும் அரசாங்கத்தின் உத்தரவை சிரம் தாழ்த்தி ஏற்ற பொலிஸார் கைது செய்துள்ளனர். எரிபொருள் விலை, உரம் சம்பந்தமான பிரச்சினை மற்றும் வேறு சில பிரச்சினைகளுக்காக வீதியிலிறங்குபவர்களின் வாய்களை மூடிவிட்டு தமக்கு அதிகாரம் வழங்கிய மக்களை அரசாங்கம் ஏமாற்றுகிறது.

கருத்துச் சுதந்திரம் எந்த அதிகாரமும் இல்லாதவர்களால் பறிக்கப்படுகிறது. அப்பாவி மக்கள் தமது பிரச்சினைகளுக்கு எப்போதாவது தீர்பு கிடைக்கும் வரை காத்திருக்கின்றனர். இவற்றைப் பார்க்கும் போது அரசாங்கம் அனைத்து விடயங்களிலும் தோற்றுப் போயுள்ளது தெரிகிறது.

இத்தருணத்தில், அடக்குமுறை பலததை பிரயோகித்து அப்பாவி மக்களை சுரண்டித் தின்பதற்கு நாம் இடமளிக்க மாட்டோம். மாத்திரமல்ல, தமது உரிமைகளுக்காக பயப்படாமல் பேசுங்கள், தமது உரிமைகளை பயன்படுத்துங்கள் என்று மக்களிடம் கூறுகிறோம்” எனவும் கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இல்லாத அதிகாரத்தை செயற்படுத்தியமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்! துமிந்த நாகமுவ | Tamil Leader | We Lead the Nation