Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

ஜனாஸாக்களை பாதுகாக்க காத்தான்குடியிலிருந்து கிண்ணியாவிற்கு அனுப்பிய வைக்கப்பட்ட குளிரூட்டி!

T

The Leader Desk

ஜூலை 8, 2021 • 4:59 PM

ஜனாஸாக்களை பாதுகாக்க காத்தான்குடியிலிருந்து கிண்ணியாவிற்கு அனுப்பிய வைக்கப்பட்ட குளிரூட்டி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சம்மேளனத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடியிலுள்ள மூன்று பிரதான ஜும்ஆ பள்ளிவாயல்களின் நிதிப் பங்களிப்புடன் இந்தக் குளிரூட்டி வாங்கப்பட்டது.
  • பின்னர் கிண்ணியாவில் நிலைமை சுமுகமானதையடுத்து மீளவும் இக்குளிரூட்டி காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்திடம் கடந்த 28.06.2021 அன்று மீளவும் கையளிக்கப்பட்டது.
  • இக்குளிரூட்டி காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு அதில் பல இடங்களிலும் கொவிட் தொற்றினால் மரணித்தவர்களின் ஜனாசாக்கள் அடக்கம் செய்யும் வரை பாதுகாத்து வைக்கப்பட்டன.
எழுத்து அளவு:

சம்மேளனத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடியிலுள்ள மூன்று பிரதான ஜும்ஆ பள்ளிவாயல்களின் நிதிப் பங்களிப்புடன் இந்தக் குளிரூட்டி வாங்கப்பட்டது. இக்குளிரூட்டி காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு அதில் பல இடங்களிலும் கொவிட் தொற்றினால் மரணித்தவர்களின் ஜனாசாக்கள் அடக்கம் செய்யும் வரை பாதுகாத்து வைக்கப்பட்டன.

பின்னர் ஓட்டமாவடி மஜ்மா நகரில் அடக்கம் செய்ய ஆரம்பிக்கப்பட்டதையடுத்து இந்தக் குளிரூட்டியில் வைக்கப்பட்ட சடலங்களும் எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன. பின்னர் கிண்ணியாவில் கடந்த மாதம் கொவிட் தொற்று தீவிரமடைந்த போது அங்கு கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்யும் வரை சடலங்களை பாதுகாப்பதில் சிரமம் ஏற்பட்டது.

இந்த நிலையில் காத்தான்குடியிலிருந்த இந்தக் குளிரூட்டியை தந்துதவுமாறு கோரிக்கை விடுத்த போது, இக்குளிரூட்டி தற்காலிகமாக கிண்ணியாவுக்கு வழங்கப்பட்டது. பின்னர் கிண்ணியாவில் நிலைமை சுமுகமானதையடுத்து மீளவும் இக்குளிரூட்டி காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்திடம் கடந்த 28.06.2021 அன்று மீளவும் கையளிக்கப்பட்டது.

ஒன்றரை மாதத்தின் பின்னர் மீளவும் இக்குளிரூட்டியை கிண்ணியா சமூக நிறுவனங்கள் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்திடம் ஒப்படைத்தன. கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.மஹ்தி, கிண்ணியா வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு உறுப்பினர் எம்.நசார் ஆகியோர் இதனை காத்தான்குடிக்கு கொண்டு வந்து மீளக் கையளித்தனர். காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரமுகர் மர்சூக் அகமட் லெவ்வையிடம் அது கையளிக்கப்பட்டது. இதில் சம்மேளன செயலாளர் மௌலவி சபாஹிர் உட்பட சம்மேளன உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்குளிரூட்டியை கிண்ணியாவுக்கு வழங்கியமைக்காக கிண்ணியாவிலுள்ள சிவில் சமூக நிறுவனத்தினர், நகர சபை மற்றும் அரசியல் பிரமுகர்கள், வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் காத்தான்குடி மக்களுக்கும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்துக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...