Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

அரசாங்கத்தின் இருப்பு ஆபத்தில் தள்ளப்படாதவாறு அடக்குமுறை செய்வதே அரசாங்கத்தின் திட்டம்!

T

The Leader Desk

ஜூலை 7, 2021 • 10:00 AM

அரசாங்கத்தின் இருப்பு ஆபத்தில் தள்ளப்படாதவாறு அடக்குமுறை செய்வதே அரசாங்கத்தின் திட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தொற்று நோய் காரணமாக நீண்டகாலம் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடாமலிருந்தாலும், பணியாளர்கள் தாங்க முடியாத கஷ்டத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
  • புகையிரத பயணத்திலும் வித்தியாசமில்லை.
  • நிவாரணங்கள் கிடைக்காமை மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பற்றாக்குறையினால் சாமானிய மக்கள் துன்பப்படுகின்றனர்.
எழுத்து அளவு:

தொற்று நோய் பரவத் தொடங்கி சுமார் ஒன்றரை வருடங்களாகிய போதிலும் இந்த நோயிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான நிரந்தர திட்டமொன்று அரசாங்கத்திடம் இல்லையென்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நிவாரணம் கேட்டு கடந்த வருடம் பூராவும் மக்கள் மேற்கொண்டு வந்த போராட்டங்களில் சுகாதார சேவை உட்பட ஏனைய தொழில் துறைகளைச் சார்ந்தவர்களும் இப்போது இணைந்துள்ளனர். தொற்று நோய் காரணமாக நீண்டகாலம் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடாமலிருந்தாலும், பணியாளர்கள் தாங்க முடியாத கஷ்டத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

நிவாரணங்கள் கிடைக்காமை மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பற்றாக்குறையினால் சாமானிய மக்கள் துன்பப்படுகின்றனர். தவிரவும், அத்தியாவசிய சேவைகளுக்காக அழைக்கப்பட்டுள்ள பணியாளர்களுக்கு முறையான போக்குவரத்துச் சேவையோ, பணியாற்றும் இடங்களில் சுகாதாரப் பாதுகாப்போ உறுதி செய்யப்படவில்லை.

சுகாதாரப் பணியாளர்களுக்கு போக்குவரத்து வசதிகள் கிடைக்காத சந்தர்ப்பங்களில் அவர்கள் தனிமைப்படுத்தல் முறையை பொருட்படுத்தாமல் பாதையில் செல்லும் வாகனங்களில் நெருங்கிக் கொண்டு செல்லும் சந்தர்ப்பங்களும் உள்ளன. புகையிரத பயணத்திலும் வித்தியாசமில்லை. தற்போது சுகாதாரப் பணியாளர்கள் தமது தேவைகள் சம்பந்தமாக விடுக்கப்பட்ட கோரிக்கை கவனிக்காமல் விடப்பட்டுள்ளதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏனைய தொழிற்துறைகளை சேர்ந்தவர்களும் தொற்று நோய்க்கு மத்தியிலாவது தமது சேவைகளில் தரமான மாற்றமொன்றுக்காக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதையும் காண முடியும்.

விசேடமாக வெளிநாட்டு செலவானி குறைந்து வரும் சவாலுக்கு முகம் கொடுப்பதற்காக இரசாயண பசளை இறக்குமதியை நிறுத்திவிட்டு சேதனப் பசளைக்கு திரும்பும் திட்டத்தினால் விவசாயிகள் தமது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதோடு, கொழும்பு துறைமுக நகரம், கப்பல் மூழ்கியமை ஆகியவற்றால் மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமலும் உள்ளனர்.

இந்த நிலையில், தொற்று நோய் பரவுவதை தடுக்கும் நடவடிக்கை எனக் கூறி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை கைது செய்ய பொலிஸ் தயாராகி வருகிறது. எதிர்ப்புகள் பரவலாகும் போது அரசாங்கத்தின் இருப்பு ஆபத்தில் தள்ளப்படாதவாறு அடக்குமுறை செய்வதே அரசாங்கத்தின் திட்டம்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

அரசாங்கத்தின் இருப்பு ஆபத்தில் தள்ளப்படாதவாறு அடக்குமுறை செய்வதே அரசாங்கத்தின் திட்டம்! | Tamil Leader | We Lead the Nation