Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

யாழில் எதிர்வரும் சனிக்கிழமை புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் போராட்டம்!

T

The Leader Desk

ஜூலை 6, 2021 • 5:33 PM

யாழில் எதிர்வரும் சனிக்கிழமை புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் போராட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி இடம்பெறவுள்ள இப் போராட்டத்தில் அனைவரையும் இணைந்துகொள்ளுமாறு புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி அழைப்புவிடுத்துள்ளது.
எழுத்து அளவு:

உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரித்து உழைக்கும் மக்களின் வயிற்றில் அடிக்காதே,

கட்டுப்பாடின்றி அதிகரித்துச் செல்லும் அத்தியவசிய பாவனைப் பொருட்களின் விலைகளைக் குறை,

எரிபொருட்களின் விலையேற்றத்தால் அவதியுறும் மக்களைப் பாதுகாக்க,

அவற்றின் விலைகளை உடனடியாகக் குறை, விவசாயிகளின் உரத் தடை நெருக்கடிக்கு விரைவாகத் தீர்வை வழங்கு,

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை விஞ்ஞான பூர்வமாக முன்னெடுத்து,

கொரோனாவின் திரை மறைவில் மக்களை வதைக்காதே, சமுத்திர சூழல் மாசுபடுத்தப்பட்டுக் கடல் வளம் நாசமாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்து,

பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு போதிய நஸ்டஈடு வழங்கு, இந்திய இழுவைமடி ரோலர் படகுகளின் சட்டவிரோத மீன்பிடி அத்துமீறலைத் தடுத்து நிறுத்து,

கொரோனாத் தடுப்பு மருந்து பாரபட்சமின்றி அனைவருக்கும் கிடைக்க வழி ஏற்படுத்து,

பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு பாடசாலைகளை மீள ஆரம்பிக்க ஆவன செய், உயர் கல்வியைத் தனியார் மயப்படுத்தி,

ஏழைகளின் கல்வி உரிமையை மறுக்காதே,

அரசியல் கைதிகள் அனைவரையும் அரசியல் தீர்மானத்தின் மூலம் உடனடியாக விடுதலை செய், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்,

நில, நீர் ஆக்கிரமிப்புகளை நிறுத்து,

மாகாண சபைகளின் அதிகாரங்களைப் பறிக்காதே,

அதிகாரப் பகிர்வை மேற்கொள்,

சுயநிர்ணய உரிமை அடிப்படையில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்,

எமது நாட்டின் வளங்களை விலைகூறி விற்காதே,

அந்நிய வல்லரசுகளின் ஆதிக்கப் போட்டிக்கு இடமளிக்காதே ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் இடம்பெறவுள்ளது.

சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி இடம்பெறவுள்ள இப் போராட்டத்தில் அனைவரையும் இணைந்துகொள்ளுமாறு புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி அழைப்புவிடுத்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

யாழில் எதிர்வரும் சனிக்கிழமை புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் போராட்டம்! | Tamil Leader | We Lead the Nation