Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

அரசாங்கத்திடம் நிதி இல்லை அதனால் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்கின்றது! வஜிர அபேவர்த்தன

T

The Leader Desk

ஜூலை 5, 2021 • 5:51 PM

அரசாங்கத்திடம் நிதி இல்லை அதனால் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்கின்றது! வஜிர அபேவர்த்தன

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அத்துடன் அரசாங்கத்திடம் அந்நிய செலாவணி இல்லாமையே ரசாயன உரம் இறக்குமதிக்கான தடையாகும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.
  • ஆனால் ஆட்சிக்கு வந்து சில மாதங்களிலேயே, 2015க்கு முன்னர் அவர்கள் மேற்கொண்டுவந்த விற்பனை செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்தார்கள்.
  • ஆனால் கடந்த எமது அரசாங்கத்திலேயே அதன் உரிமைத்துவத்தை இலங்கைக்கு பெற்றுக்கொண்டு 99 வருட குத்தகை அடிப்படையில் சீனாவுக்கு வழங்க நடவடிக்கை எடுத்தோம்.
  • அத்துடன் அரசாங்கம் தற்போது கெரவலப்பிட்டி வெஸ் கொஸ்ட் வலுசக்தி உற்பத்தி நிலையத்தின் 51வீத பங்குரிமையை அமெரிக்காவுக்கு சொந்தமான நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டுவருவதாக தெரியவருகின்றது.
எழுத்து அளவு:

அத்துடன் அரசாங்கத்திடம் அந்நிய செலாவணி இல்லாமையே ரசாயன உரம் இறக்குமதிக்கான தடையாகும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருதது தெரிவிக்கையிலேய இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் நாட்டு வங்களை விற்பனை செய்வதாகவும் தங்களுடைய ஆட்சியில் நாட்டு வளங்கள் எதனையும் விற்கப்போவதில்லை என்ற வாக்குறுதியிலேயே அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

ஆனால் ஆட்சிக்கு வந்து சில மாதங்களிலேயே, 2015க்கு முன்னர் அவர்கள் மேற்கொண்டுவந்த விற்பனை செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்தார்கள். 2015க்கு முன்னர் இவர்கள் காலிமுகத்திடலை சீனாவுக்கு உரித்துரிமையாக வழங்கியிருந்தார்கள்.

ஆனால் கடந்த எமது அரசாங்கத்திலேயே அதன் உரிமைத்துவத்தை இலங்கைக்கு பெற்றுக்கொண்டு 99 வருட குத்தகை அடிப்படையில் சீனாவுக்கு வழங்க நடவடிக்கை எடுத்தோம்.

அத்துடன் அரசாங்கம் தற்போது கெரவலப்பிட்டி வெஸ் கொஸ்ட் வலுசக்தி உற்பத்தி நிலையத்தின் 51வீத பங்குரிமையை அமெரிக்காவுக்கு சொந்தமான நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டுவருவதாக தெரியவருகின்றது.

இந்த நிலையத்தின் 51 வீத பங்கு அரசாங்கத்துக்குரியது. 27வீத பங்கு ஈ.பி.எப். க்கும் 18 வீதம் லெகோ நிறுவனத்துக்கும் எஞ்சியது எல்.ரி.எல். க்கும் உரித்தாகும். அதன் பிரகாரம் இந்த நிலையத்தின் லாபம் பிரிந்து செல்கின்றதா என்பதை அரசாங்கம் தெரிவிக்கவேண்டும்.

மேலும் 2015/ 2019 காலத்தில் ஐக்கிய தேசிய கட்சி அதிகாரத்தில் இருக்கும்போது எமது வலுசக்தி உற்பத்தியை (எல்.என்.ஜி) இயற்கை திறவ எரிவாயு ஆக மாற்றியமைக்க தீர்மானித்திருந்தோம்.

இரண்டு எல்.என்.ஜி நிலையங்களை அமைப்பதற்கும் செயற்படுத்துவதற்கும் முற்தரப்பு ஒப்பந்தங்கள் இரண்டுக்கு வந்து, நாங்கள் ஜப்பான் மற்றும் இந்திய அரசாங்கங்களுடன் இணைந்து செயற்பட்டோம்.

அதேபோன்று தென் மாகாணத்தில் எல்.என்.ஜி. மின்சார உற்பத்தி நிலையம் ஒன்றை அமைப்பதற்கு சீன அரசாங்கத்துடன் நடவடிக்கை எடுத்தோம்.

இந்த விடயங்கள் எதனையும் கண்டுகொள்ளாமலேயே அரசாங்கம் கெரவலப்பிட்டி வெஸ் கொஸ்ட் வலுசக்தி உற்பத்தி நிலையத்தின் 51வீத பங்கை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

மேலும் அரசாங்கம் இவ்வாறு நாட்டு வளங்களை விற்பனை செய்வதற்கு எடுத்திருக்கும் தீர்மானங்கள் மூலம் அரசாங்கத்திடம் பணம் இல்லை என்ற அடையாளம் தெளிவாக தெரிகின்றது.

அதேபோன்று தற்போது நாட்டில் உரம் இல்லாமல் விவசாயிகள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அரசாங்கம் ரசாயன உரம் இறக்குமதி செய்வததை தடைசெய்ய எடுத்த தீர்மானத்தினாலேயே இந்த நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

அத்துடன் உலகில் காபநெய்ட் உரத்தின் மூலம் விவசாயம் மேற்கொள்ளப்படுவது 1.5வீதமாகும். அதனால் எமது நாட்டில் முற்றாக காபநெய்ட் உரத்தின் மூலம் விவசாயம் மேற்கொள்வதாக இருந்தால், பல வருடகாலங்கள் தேவைப்படும்.

என்றாலும் அரசாங்கம் ரசாயன உரம் இறக்குமதி செய்வதை தடைசெய்திருப்பதற்கு தெரிவிக்கும் காரணம் அதுவல்ல. ரசாயன உரம் இறக்குமதிசெய்ய அரசாங்கத்திடம் அன்னிய செலாவணி இல்லை. அதனாலேயே காபநெய்ட் உரம் உற்பத்தி செய்வதென்ற பொய் பிரசாரத்தை மேற்கொண்டு செல்கின்றது.

எனவே எமது ஆட்சிக்காலத்தில் நாங்கள் மேற்கொண்டுவந்த வேலைத்திட்டங்கள் தொடர்பில் பொய் விமர்சனங்களை செய்து மக்களை ஏமாற்றியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. அதனால் பொய்சொல்லி பெற்றுக்கொள்ளும் ஆட்சியொன்றின் இறுதி பெறுபேறு இவ்வாறுதான் இருக்கும் என்பதை மக்கள் தெரிந்துகாெள்ளவேண்டும் என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

அரசாங்கத்திடம் நிதி இல்லை அதனால் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்கின்றது! வஜிர அபேவர்த்தன | Tamil Leader | We Lead the Nation