Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

காவல்துறையில் இடம்பெறும் பாலியல் துன்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க அழைப்பு!

T

The Leader Desk

ஜூலை 4, 2021 • 4:38 PM

காவல்துறையில் இடம்பெறும் பாலியல் துன்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க அழைப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சித்திரவதைக்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி, ஜூலை 2, வெள்ளிக்கிழமை மக்கள் சக்தி அமைப்பின் சார்பில், மக்கள் சட்டத்தரணிகள் மன்றத்தின் சட்டத்தரணிகள் முறைப்பாட்டை செய்துள்ளனர்.
  • ஆபாச புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் முறையிடுவதற்காக, 16 வயது சிறுமி ஒருவர் அண்மையில் தனது பெற்றோருடன் பாதுக்க காவல் நிலையத்திற்கு சென்றிருந்ததாக அந்த அமைப்பு தெரிவிக்கின்றது.
  • "கடந்த 21ஆம் திகதி பாதுக்க காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்து ரசீதை பெற்றுக்கொண்ட பின்னர், முறைப்பாட்டை செய்ய சென்ற சிறுமியின் தந்தையை அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் பொலிஸ்நிலைய சிறைக்கூடத்தில் அடைத்துள்ளனர்.
எழுத்து அளவு:

சித்திரவதைக்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி, ஜூலை 2, வெள்ளிக்கிழமை மக்கள் சக்தி அமைப்பின் சார்பில், மக்கள் சட்டத்தரணிகள் மன்றத்தின் சட்டத்தரணிகள் முறைப்பாட்டை செய்துள்ளனர்.

பாதுக்கை மற்றும் நெலுவ காவல் நிலையங்களில் அண்மையில், ஒரு பெண் மற்றும் ஒரு சிறுமி யுவதி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவங்களிலிருந்து "இலங்கை சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட சமிக்ஞையை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்" எனவும், அவை நிகழாமல் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மக்கள் சக்தி அமைப்பின் நிர்வாக உறுப்பினர் அஷிலா தண்தெனியவால், இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முன்வைத்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க நிறுவனங்களுக்குள் அரசியலமைப்பு உத்தரவாதம் அளித்த அடிப்படை உரிமையை மீறுவது மிகவும் ஆபத்தான சூழ்நிலை என மக்கள் சக்தி அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆபாச புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் முறையிடுவதற்காக, 16 வயது சிறுமி ஒருவர் அண்மையில் தனது பெற்றோருடன் பாதுக்க காவல் நிலையத்திற்கு சென்றிருந்ததாக அந்த அமைப்பு தெரிவிக்கின்றது.

"கடந்த 21ஆம் திகதி பாதுக்க காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்து ரசீதை பெற்றுக்கொண்ட பின்னர், முறைப்பாட்டை செய்ய சென்ற சிறுமியின் தந்தையை அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் பொலிஸ்நிலைய சிறைக்கூடத்தில் அடைத்துள்ளனர்.

சிறுமியின் தாய் பின்னர் சம்பவ இடத்தில் இருந்த ஒரு காவல்துறை அதிகாரியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தாக்கப்பட்டதாக, மக்கள் சக்தி அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, முறைப்பாடு ஒன்றை செய்வதற்காக, ஜூன் 29ஆம் திகதி தனது தாயுடன் நெலுவ காவல் நிலையத்திற்குச் சென்ற 15 வயது சிறுமி அங்குள்ள ஒரு காவல்துறை அதிகாரியால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக அந்தக் குழு மேலும் தெரிவித்துள்ளது.

"அங்கும்கூட சிறுமியின் தாய் நுட்பமாக திசை திருப்பப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்."

அரச காவலரால் துன்புறுத்தல்

இலங்கை காவல்துறையினருக்குள் நடந்த இரண்டு பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் காவல்துறையினரால் குடிமக்களுக்கு இன்னும் பாதுகாப்பை வழங்க முடியுமா என்ற கேள்வியை எழுப்புவதாக மக்கள் சக்தி அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.

"காவல்துறையின் அவநம்பிக்கை சட்டத்தின் ஆட்சியை மோசமாக பாதிப்பதை யாராலும் தடுக்க முடியாது."

காவலில் இருந்த சந்தேகநபர்களை காவல்துறையின் உதவியுடன் கொலை செய்வதன் மூலம் இலங்கை காவல்துறையினர் இரண்டு மாதங்களுக்கு முன்னர், சட்டவிரோத மற்றும் பயங்கரமான நடத்தைகளைக் காட்டியதாகவும் மக்கள் சக்தி அமைப்பு தனது முறைப்பாட்டில் நினைவுபடுத்தியுள்ளது.

பாதுக்கை மற்றும் நெலுவ காவல் நிலைய சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பெண்  மற்றும் சிறுமிக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கவும், இலங்கை காவல்துறையில் தொடர்ந்து இடம்பெறும் இவ்வாறான வன்முறைகளைத் தடுக்கவும், இலங்கையின் முன்னணி மனித உரிமை அமைப்பான, மனித உரிமைகள் ஆணைக்குழு, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென, மக்கள் சக்தி அமைப்பு அந்த கடிதத்தின் ஊடாக கோரியுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

காவல்துறையில் இடம்பெறும் பாலியல் துன்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க அழைப்பு! | Tamil Leader | We Lead the Nation