Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

சிறு கட்சிகள் அனைத்தும் இணைத்துக்கொள்ளப்படும்! மனோ கணேசன்

T

The Leader Desk

ஜூலை 2, 2021 • 1:30 PM

சிறு கட்சிகள் அனைத்தும் இணைத்துக்கொள்ளப்படும்! மனோ கணேசன்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜே.வி.பி தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பு அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டமையால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உட்பட ஏனைய கட்சிகள் அழைக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
  • “இன்றைய விகிதாசார முறைமையே எமது பொது நிலைப்பாடு என நாம் அவருக்கு கூறியபோது, சஜித் பிரேமதாச எம்பி, தான் இன்றைய விகிதாசார முறைமைக்கு முழு ஆதரவு தருவதாக எமக்கு உறுதியளித்துள்ளார்.
  • மேலும், இன்றைய விகிதாசார முறைமை தொடர்ந்து பேணப்படுவதை, பொது நன்மை கருத்தை தாமும் ஆதரிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச எம்.பியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் எம்.பியும் உறுதியளித்துள்ளனர் எனவும் மனோ கணேசன் எம்.பி கூறினார்.
எழுத்து அளவு:

ஜே.வி.பி தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பு அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டமையால்,  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உட்பட ஏனைய கட்சிகள் அழைக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், இன்றைய விகிதாசார முறைமை தொடர்ந்து பேணப்படுவதை, பொது நன்மை கருத்தை தாமும் ஆதரிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச எம்.பியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் எம்.பியும் உறுதியளித்துள்ளனர் எனவும் மனோ கணேசன் எம்.பி கூறினார்.

சிறு கட்சிகளின் தேர்தல் சீர்திருத்த பேச்சுவார்தையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏன் அழைக்கப்படவில்லை என்ற சர்ச்சை தொடர்பில் கருத்துக் கூறிய அவர் மேலும் கூறியுள்ளதாவது, 

“தமிழ், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் இன ரீதியான சிறு கட்சிகளும், அரசியல் ரீதியான சிறு கட்சிகளும்  தேர்தல் சீர்திருத்தம் என்ற பொதுப் பிரச்சினையை கூட்டாகவே எதிர்கொள்ள வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.

“இந்தப் பிரச்சினை தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பியுடன் பேசுகின்ற அதேவேளை, நானும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் எம்.பியும், ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச எம்.பி உடனும் இது தொடர்பில் பேசியுள்ளோம்.

“இன்றைய விகிதாசார முறைமையே எமது பொது நிலைப்பாடு என நாம் அவருக்கு கூறியபோது, சஜித் பிரேமதாச எம்பி, தான் இன்றைய விகிதாசார முறைமைக்கு முழு ஆதரவு தருவதாக எமக்கு உறுதியளித்துள்ளார்.

“இது தொடர்பாக தமது கட்சி பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும்பண்டார எம்.பியை அழைத்து அறிவுறுத்தல் வழங்கினார்.

“அதேபோல்,  தேர்தல் சீர்திருத்த பேச்சுவார்தை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களுடனும் நான் நேரடியாக பலமுறை பேசியுள்ளேன்.

“வடக்கு மாகாணத்தில் புதிய கலப்பு முறைமை தமக்கு சாதகமாக அமையக்கூடிய வாய்ப்புகள் இருந்தாலும், நாடு முழுக்க சிதறி வாழும், தமிழ், முஸ்லிம் மக்களின் நன்மை கருதி தாமும்  இன்றைய விகிதாசார முறைமை தொடர்ந்து பேணப்படுவதை ஆதரிக்க தயார் என கூட்டமைப்பு பேச்சாளர் சுமந்திரன் எம்.பி என்னிடம் உறுதியளித்துள்ளார்.

“தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களும் இத்தகைய நிலைப்பாட்டையே கொண்டுள்ளதாக நான் அறிந்துள்ளேன்” என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...