Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

பட்டக் கடைகளை நாடு பூராவும் திறப்பதற்கு எதிராக முன்னிலை சோஷலிஸக் கட்சி ஆர்ப்பாட்டம்!

T

The Leader Desk

ஜூலை 1, 2021 • 4:55 PM

பட்டக் கடைகளை நாடு பூராவும் திறப்பதற்கு எதிராக முன்னிலை சோஷலிஸக் கட்சி ஆர்ப்பாட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ‘இந்த சட்டமூலத்தின் வாயிலாக இந்நாட்டு கல்வியை தனியார்மயப்படுத்த அரசாங்கம் திட்டமிடுகிறது.
  • இந்த சட்டமூலம் சர்.ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக் கழக சட்டமூலம் என்ற பெயரில் கடந்த மார்ச் 26ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
  • இந்த சட்டமூலம் 2018 ஏப்ரல் 21ம் திகதி நல்லாட்சி அரசாங்கம் கொண்டுவந்த சட்டமூலமாகும்.
  • நாட்டு மக்களும் அதை எதிர்த்தார்கள்.
எழுத்து அளவு:

‘இந்த சட்டமூலத்தின் வாயிலாக இந்நாட்டு கல்வியை தனியார்மயப்படுத்த அரசாங்கம் திட்டமிடுகிறது. மாத்திரமல்ல, தனியார் பல்கலைக் கழகங்களை சட்டபூர்வமாக்கி, கல்வியை இராணுவமயமாக்கும் திட்டமும் இந்த சட்டமூலத்தின் வாயிலாக முன்னெடுக்கப்படுகிறது.

இந்த சட்டமூலம் சர்.ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக் கழக சட்டமூலம் என்ற பெயரில் கடந்த மார்ச் 26ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் 2018 ஏப்ரல் 21ம் திகதி நல்லாட்சி அரசாங்கம் கொண்டுவந்த சட்டமூலமாகும்.

அப்போதைய நல்லாட்சி அரசாங்கம் இந்த சட்டமூலத்தை கொண்டுவரும் போது தற்போதைய அரசாங்கத்தில் உள்ளவர்கள் அதை எதிர்த்தார்கள். நாட்டு மக்களும் அதை எதிர்த்தார்கள். இதனால் நல்லாட்சி அரசாங்கம் அதை திரும்பப் பெற்றுக் கொண்டது.

ஆனால், தற்போதைய அரசாங்கம் இந்த சட்டமூலத்தை இரகசியமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இந்த சட்டமூலத்தில் உள்ளபடி, கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரியின் கிளைகள் என்ற வகையில் பணம் அறவிடும் பட்டக் கடைகளை நாடு பூராவும் திறக்க முடியும்.

இது சம்பந்தமாக தீர்மானிக்கும் அதிகாரம் பல்கலைக் கழக ஆணையத்திற்கோ, உயர் கல்வி அமைச்சிற்கோ வழங்கப்படாமல், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக் கழகத்தின் இராணுவ சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக் கழகத்தின் கிளை என்ற பெயரில் நாடு பூராவும் தனியார் பல்கலைக் கழகங்களை அமைக்கும் நிலை உருவாகும்”. எனக் கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...