Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

குஜராத் பொலிஸ் நிலையத்தில் பேய்கள் மீது புகார் கொடுத்த நபர்!

T

The Leader Desk

ஜூலை 1, 2021 • 4:14 AM

குஜராத் பொலிஸ் நிலையத்தில் பேய்கள் மீது புகார் கொடுத்த நபர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குஜராத்தில் உள்ள பாஞ்ச்மஹல் மாவட்டம் ஜம்புகோடா தாலுகாவைச் சேர்ந்த 35 வயது விவசாயி ஒருவர், அங்குள்ள பொலிஸ் நிலையத்திற்கு புகார் அளிப்பதற்காக சென்றுள்ளார்.
  • இதைக் கேட்ட பொலிசார் அந்த நபரின் நிலையை உணர்ந்து, அவரை சற்று அமைதிப்படுத்துவதற்காக அவரது புகாரை பதிவு செய்து கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
  • பின் அவருடைய குடும்பத்தாரை அழைத்து விசாரித்ததில், அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும், 10 நாட்களாக மாத்திரை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதும் தெரியவந்தது.
எழுத்து அளவு:

குஜராத்தில் உள்ள பாஞ்ச்மஹல் மாவட்டம் ஜம்புகோடா தாலுகாவைச் சேர்ந்த 35 வயது விவசாயி ஒருவர், அங்குள்ள பொலிஸ் நிலையத்திற்கு புகார் அளிப்பதற்காக சென்றுள்ளார். மிகவும் பதட்டத்துடன் காணப்பட்ட அந்த நபரை ஆசுவாசப்படுத்தி பொலிசார் அவரிடம் விசாரணை செய்தனர்.

அப்போது அவர், தோட்டத்தில் தன்னை வேலை செய்ய விடாமல், இரண்டு பேய்கள் தொடர்ந்து தொந்தரவு கொடுப்பதாகவும், தன்னை கொலை செய்வதாகவும் மிரட்டுவதாகவும் பொலிசாரிடம் கூறியுள்ளார். மேலும் தனக்கு மிரட்டல் விடுக்கும் பேய்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் அந்த நபர் கூறியுள்ளார்.

இதைக் கேட்ட பொலிசார் அந்த நபரின் நிலையை உணர்ந்து, அவரை சற்று அமைதிப்படுத்துவதற்காக அவரது புகாரை பதிவு செய்து கொள்வதாக தெரிவித்துள்ளனர். பின் அவருடைய குடும்பத்தாரை அழைத்து விசாரித்ததில், அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும், 10 நாட்களாக மாத்திரை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து குடும்பத்தாருக்கு அறிவுரை கூறி, அந்த நபரை அவரது குடும்பத்தினருடன் பொலிசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை பொலிசார் பொறுமையுடன் கையாண்ட விதம் குறித்து பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் பொலிஸ்நிலையத்தில் பேய்கள் மீது ஒருவர் புகார் கொடுத்த சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...