Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

வியாழேந்திரனின் வீட்டின் முன்னால் கொலை செய்யப்பட்ட இளைஞனுக்கு நீதி வேண்டும்! சாணக்கியன்

T

The Leader Desk

ஜூன் 29, 2021 • 5:28 PM

வியாழேந்திரனின் வீட்டின் முன்னால் கொலை செய்யப்பட்ட இளைஞனுக்கு நீதி வேண்டும்! சாணக்கியன்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக அவரது சுட்டு படுகொலை செய்யப்பட்ட இளைஞனின் வீட்டுக்குச் சென்று அவர்கள் குடும்பத்திற்கு அனுதாபம் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
  • ஆகவே இந்த உயிர் இழந்தவருக்கான நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.
  • மட்டக்களப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் இருக்கின்றோம் நான்கு பேர் இருந்தாலும் எதற்காக செல்கின்ற இடமெல்லாம் 50 அறுபது பேரை கூட்டிச்செல்ல வேண்டும்.
எழுத்து அளவு:

கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக அவரது  சுட்டு படுகொலை செய்யப்பட்ட இளைஞனின் வீட்டுக்குச் சென்று அவர்கள் குடும்பத்திற்கு அனுதாபம் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது நீதிக்காக போராடும் ஒரு அமைப்பு அந்த வகையில் உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கிடைக்க வேண்டும். நீதி கிடைக்கும் விடயத்தில் இராஜாங்க அமைச்சரும்  ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்திருந்தார்.  அந்த ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

நாங்கள் கேட்பது மட்டக்களப்பு மாவட்டம் மட்டும் அல்ல ஒட்டுமொத்த இலங்கையிலேயே இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். எமது கட்சியும் உறுதியாக இருக்கின்றது .

ஆகவே இந்த உயிர் இழந்தவருக்கான நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். குறித்த இளைஞனின் கொலை தொடர்பாக பல்வேறுபட்ட கருத்துக்கள் வந்த வண்ணமே இருக்கின்றன.  ஆனால் உண்மை நிலை அறியப்படவேண்டும்.  உண்மை நிலை நாட்டப்பட வேண்டும்.

மட்டக்களப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் இருக்கின்றோம் நான்கு  பேர் இருந்தாலும் எதற்காக செல்கின்ற இடமெல்லாம் 50 அறுபது பேரை கூட்டிச்செல்ல வேண்டும்.

இப்படியான செயற்பாடுகள் தான் இவ்வாறான கொலைச்சம்பவங்களுக்கான காரணமாக இருக்கின்றது . எமது மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள்.  மக்களிடம் செல்லும்போது நாங்கள் தனியாக செல்லலாம் ஆகவே இதுபோன்ற கொலைகள் இனி மாவட்டத்தில் இடம்பெறக்கூடாது என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...