Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

பொத்துவிலில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் ஒரு வாரமாகியும் இன்னும் வீடு திரும்பவில்லை!

T

The Leader Desk

ஜூன் 29, 2021 • 6:27 AM

பொத்துவிலில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் ஒரு வாரமாகியும் இன்னும் வீடு திரும்பவில்லை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கடந்த 23 ஆம் திகதி அதிகாலை பொத்துவில் அறுகம்பை மீன்பிடித் துறையிலிருந்து OFRP -A- 1456- KMN எனும் இலக்க அடையாளம் கொண்ட இயந்திரப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
  • பொத்துவில் களப்புக்கட்டு பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான மொகமட் தாஹா என்பவரும் பொத்துவில் பசரிச் சேனையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 32 வயதுடைய ஜெளபர் தாஜுதீன் ஆகிய இருவரும் ஒரு வாரமாகியும் இதுவரை வீடு திரும்பாத நிலையில் காணாமல் போயுள்ளனர்.
  • கடந்த 23ம் திகதி அதிகாலை வீட்டில் இருந்து 5 லீட்டர் குடி நீரும் , 8 ஆப்பயுடனுமே அவர்கள் கடலுக்கு சென்றதாக அறியக்கிடைக்கின்றது.
எழுத்து அளவு:

கடந்த 23 ஆம் திகதி அதிகாலை பொத்துவில் அறுகம்பை மீன்பிடித் துறையிலிருந்து OFRP -A- 1456- KMN எனும் இலக்க அடையாளம் கொண்ட இயந்திரப்படகில்  கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

பொத்துவில் களப்புக்கட்டு பகுதியைச்  சேர்ந்த 52 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான மொகமட் தாஹா என்பவரும்  பொத்துவில் பசரிச் சேனையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 32 வயதுடைய  ஜெளபர் தாஜுதீன் ஆகிய இருவரும் ஒரு வாரமாகியும் இதுவரை வீடு திரும்பாத நிலையில் காணாமல் போயுள்ளனர்.

கடந்த 23ம் திகதி அதிகாலை வீட்டில் இருந்து 5 லீட்டர் குடி நீரும் , 8 ஆப்பயுடனுமே அவர்கள் கடலுக்கு சென்றதாக அறியக்கிடைக்கின்றது. தினமும் அதிகாலை கடலுக்கு மீன் பி்டிக்கச் சென்றால் மதியம் வீடு திரும்பிவிடும் அவர்கள் இன்றுடன் ஒரு வாரமாகியும் வீடு திரும்பவில்லை என  அவர்களது குடும்பம் கண்ணீரோடு தேடி தெரிவிக்கின்றனர்.

அரசாங்கம் இவர்கள் தொடர்பான தகவலை மிக விரைவாக வழங்க வேண்டும் என உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...