Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

ரணில் இராணுவதளபதியை விமர்சித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது! பொன்சேகா

T

The Leader Desk

ஜூன் 29, 2021 • 6:04 AM

ரணில் இராணுவதளபதியை விமர்சித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது! பொன்சேகா

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ரணில் விக்கிரமசிங்க தனது நாடாளுமன்ற உரையில் இராணுவதளபதியை விமர்சித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
  • உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளை கண்டுபிடிப்போம் என தெரிவித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இது வரை இந்த விடயத்தில் திருப்தியளிக்ககூடிய முன்னேற்றத்தை காண்பிக்கவில்லை என சரத் பொன்சேகா.
  • இல் உயர் பாதுகாப்பு வலயங்களை மூடிவிடுமாறு ரணில் விக்கிரமசிங்க எனக்கு உத்தரவிட்டார்.
எழுத்து அளவு:

ரணில் விக்கிரமசிங்க தனது நாடாளுமன்ற உரையில் இராணுவதளபதியை விமர்சித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

2002 இல் உயர் பாதுகாப்பு வலயங்களை மூடிவிடுமாறு ரணில் விக்கிரமசிங்க எனக்கு உத்தரவிட்டார். நான் இது குறித்து அவ்வேளை ஜனாதிபதியாகயிருந்த சந்திரிகா குமாரதுங்கவிடம் முறைப்பாடு செய்தேன் என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சில சிஐடி உத்தியோகத்தர்கள் அசேல சம்பத்தினை கைதுசெய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் எங்கள் எதிர்கால அரசாங்கத்தில் இது குறித்து விசாரணைகளை மேற்கொள்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தீவிரவாத அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பை நோக்கிய கவனம் குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைவடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளை கண்டுபிடிப்போம் என தெரிவித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இது வரை இந்த விடயத்தில் திருப்தியளிக்ககூடிய முன்னேற்றத்தை காண்பிக்கவில்லை என சரத் பொன்சேகா. பாதுகாப்பு படையினரை வலுப்படுத்துவதற்காக சீர்திருத்த முயற்சிகள் இடம்பெற்றுள்ளன என அரசாங்கம் தெரிவிப்பதையும் அவர் நிராகரித்துள்ளார்.

இதுவரை அவ்வாறான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை அச்சுறுத்தல்கள் இன்னமும் தொடர்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் கப்பல்கள் தீப்பிடிக்கும் விடயங்கள் திட்டமிடப்பட்டவை போல தோன்றுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் மீன்பிடி சமூகத்திற்கான இழப்பீட்டு தொகை குறித்து தெரிவிக்கின்ற போதிலும் அதனை எவ்வாறு பொதுமக்களிற்கு வழங்கவுள்ளதாக எதனையும் தெரிவிக்கவில்லை என சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். எக்ஸ்பிரஸ்பேர்ள் கப்பலிற்கு அதிகாரிகளே காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ரணில் இராணுவதளபதியை விமர்சித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது! பொன்சேகா | Tamil Leader | We Lead the Nation