Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

"காணாமல் ஆக்கப்படுவதற்கான ஆரம்பம்" குறித்து அச்சம் வெளியிடப்பட்டுள்ளது!

T

The Leader Desk

ஜூன் 28, 2021 • 3:24 PM

"காணாமல் ஆக்கப்படுவதற்கான ஆரம்பம்" குறித்து அச்சம் வெளியிடப்பட்டுள்ளது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜூன் 25 ஆம் திகதி, சுமார் 20 பேர் கொண்ட குழு, எவ்வித காரணமும் இன்றி, பொதுமக்கள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் ஏற்பாட்டாளர், அசேல சம்பத்தை கடத்திச் சென்றதாக, அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
  • குற்றப்புலனாய்வு பிரிவினால் கடத்தப்பட்ட சிவில் சமூக ஆர்வலர் அசேல சம்பத் ஜூன் 26ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதவானினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
  • அசேல சம்பத்தின் குடும்பம் இன்று காணாமல் ஆக்கப்படுவதற்கான முதல் கட்டத்தை எதிர்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • ஊடகவியலாளர் ரிச்சர்ட் டி சொய்சா, சட்டத்தரணி லியனாராச்சி ஆகியோர் 1989 இல் இவ்வாறு கைது செய்யப்பட்டதாகவும் பின்னர் எந்த தகவலும் இல்லாமல் அவர்கள் இன்றுரை காணாமல் போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

ஜூன் 25 ஆம் திகதி, சுமார் 20 பேர் கொண்ட குழு, எவ்வித காரணமும் இன்றி, பொதுமக்கள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் ஏற்பாட்டாளர், அசேல சம்பத்தை கடத்திச் சென்றதாக,  அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

ஜனாதிபதி நாட்டு மக்களுக்காக உரையாற்றும்போது, நடந்த கடத்தல் தொடர்பில் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவிய நிலையில், அவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

சிவில் உடையில் வந்த குற்றப்புலனாய்வு அதிகாரிகளும், சீருடையில் இருந்த பிலியந்தலை பொலிஸின் அதிகாரிகளும் இணைந்து, அசேல சம்பத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய சட்டப்படி அவரை கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தார்.

அசேல சம்பத்தின் குடும்பத்தின் தகவலுக்கு அமைய இது ஒரு கடத்தல் எனவும், எனினும் பொலிஸாரின் உத்தியோகபூர்வ கூற்றின்படி இது சட்டப்பூர்வ கைது எனவும், காணாமல் போனோர் குடும்ப அங்கத்தவர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

குற்றப்புலனாய்வு பிரிவினால் கடத்தப்பட்ட சிவில் சமூக ஆர்வலர் அசேல சம்பத் ஜூன் 26ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதவானினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

காணாமல் போனவர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழுவின் புள்ளிவிபரங்களுக்கு அமைய, காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பில் இலங்கை உலகில் இரண்டாவது இடத்தில் காணப்படுகின்ற நிலையில், அசேல சம்பத் கடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டபோது, காணாமல் போனவர்களின் குடும்பங்கள் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்ததாக, மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் காணாமல் போனோர் குடும்ப அங்கத்தவர்கள் ஒன்றியத்தின் தலைவருமான பிரிட்டோ பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அது ஏன்?

1989 ஆம் ஆண்டு தெற்கில் நடந்த பயங்கரவாதம் மற்றும் முப்பது ஆண்டுகால யுத்தத்தின் அனுபவத்தில், கடத்தல்கள், காணாமல் போவதற்கான முதல் படியாகும் என சிரேஷ்ட மனித உரிமை ஆர்வலர் சுட்டிக்காட்டுகிறார்.

brito

"இராணுவம் மற்றும் பொலிஸார் என அடையாளப்படுத்தப்பட்டவர்களால் கடத்தப்பட்டவர்கள் இரகசியமாக தடுத்து வைக்கப்பட்டு பின்னர் கொலைகள் வெளியாகாமல், எந்தவொரு தடயமும் இல்லாது காணாமல் ஆக்கப்பட்டனர். எனினும் கைது செய்ததை ஒப்புக்கொள்ளவும் இல்லை." என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அசேல சம்பத்தின் குடும்பம் இன்று காணாமல் ஆக்கப்படுவதற்கான முதல் கட்டத்தை எதிர்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நபர் தற்காலிமாவேனும் காணாமல் போவது அவர்களின் உறவினர்களுக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டுகிறார்.

"அவர் கடத்தப்பட்டதாக அவரது குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்ட சந்தர்பத்தில் அவர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவே நினைப்பார்கள். ஒரு கணமேனும் காணாமல் ஆக்கப்பட்டால் அவர்களது உறவினர்களுக்கு அது கடுமையான உளவியல் அதிர்ச்சியாகும். "

இரவில் கைது செய்யப்படுதல்

sarath rishad sampath

கொடூரமான குற்றவாளிகளாக கருதி இந்த கைதுகள் ஏன் இரவில் இடம்பெறுகின்றன என கேள்வி எழுப்பியுள்ள காணாமல் போனோர் குடும்ப அங்கத்தவர்கள் ஒன்றியம், ஜெனரல் சரத் பொன்சேகா, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அசேல சம்பத் ஆகியோர் இரவில் கைது செய்யப்பட்ட விடயத்தையும்  சுட்டிக்காட்டுகின்றனர்.

ஊடகவியலாளர் ரிச்சர்ட் டி சொய்சா, சட்டத்தரணி லியனாராச்சி ஆகியோர் 1989 இல் இவ்வாறு கைது செய்யப்பட்டதாகவும் பின்னர் எந்த தகவலும் இல்லாமல் அவர்கள் இன்றுரை காணாமல் போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். (ரிச்சர்டின் உடல் பின்னர் மொரட்டு கொரலவெல்ல கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது."

இதுபோன்ற பல சம்பவங்கள் வடக்கு மற்றும் கிழக்கிலும் பதிவாகியுள்ளதாக காணாமல் போனோர் குடும்ப அங்கத்தவர்கள் ஒன்றியம் சுட்டிக்காட்டுகிறது.

நாட்டில் மீண்டும் காணாமல் போகச் செய்யும் செயற்பாட்டின் ஆரம்பமே இதுவென சுட்டிக்காட்டியுள்ள,  காணாமல் போனோர் குடும்ப அங்கத்தவர்கள் ஒன்றியம், இது சட்டரீதியாக இடம்பெற்ற கைது என ஏற்றுக்கொண்டுள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண போன்றவர்கள், இவ்வாறான கைதுகளை நிராகரிப்பதற்கு எடுக்கும் காலத்தின் அளவானது, சமூகத்தில் இத்தகைய கடத்தல்கள் குறித்து பொதுமக்கள் வெளிக்காட்டும் எதிர்ப்பின் அடிப்படையிலேயே தங்கியுள்ளதாக பிரிட்டோ பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

"கடந்த காலத்தில் நாட்டின் பல வீடுகளில் கேட்ட கடத்தல்கள் குறித்து புலம்பல்கள் இன்று அசேல சம்பத்தின் புதல்வியிடம் ஒரு கணமாவது கேட்க முடிந்தது. எதிர்காலத்தில் எமது வீட்டிலும் இந்த புலம்பல்  கேட்மாமல் தடுப்பது  நம் அனைவரின் பொறுப்பாகும்.”

பலருக்கு கிடைக்காத அதிர்ஷ்டத்தைப் பெற்ற அசேல சம்பத்,  நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்ட விடயத்தை வலியுறுத்தியுள்ள காணாமல் போனோர் குடும்ப அங்கத்தவர்கள் ஒன்றியம் ஆனால் கடத்தல் குறைந்தபட்சம் ஒரு கணமாவது இடம்பெற்றது என்பதை மறந்துவிடக் கூடாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...