Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

விடுதலையான அரசியல் கைதிகள் தண்டனைக்காலத்தை விடவும் அதிகமான காலத்தைத் தடுப்புக்காவலில் செலவிட்டுள்ளனர்! அம்பிகா சற்குணநாதன் !

T

The Leader Desk

ஜூன் 28, 2021 • 2:00 PM

விடுதலையான அரசியல் கைதிகள் தண்டனைக்காலத்தை விடவும் அதிகமான காலத்தைத் தடுப்புக்காவலில் செலவிட்டுள்ளனர்! அம்பிகா சற்குணநாதன் !

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் பேசும்போது சில முக்கிய விடயங்களைக் கருத்திற்கொள்ள வேண்டும்.
  • அவர்களில் பெருமளவானோர் தாம் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு சில மாதங்களின் பின்னரே நீதிமன்ற மருத்துவ அதிகாரியிடம் அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
  • பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த 16 பேர் அண்மையில் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்யப்பட்டனர்.
  • அவர்களில் 7 பேரின் தண்டனைக்காலம் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஜுன் மாதத்துடன் முடிவடைய இருந்தமை குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் பேசும்போது சில முக்கிய விடயங்களைக் கருத்திற்கொள்ள வேண்டும். தற்போது விடுவிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் எதிர்வரும் ஒருவருடகாலத்திற்குள் விடுதலை செய்யப்பட இருந்தவர்களாவர்.

சிலர் தண்டனைக்காலத்தை விடவும் இரண்டு மடங்கான அல்லது அதனைவிடவும் அதிகமான காலத்தைத் தடுப்புக்காவலில் செலவிட்டுள்ளனர். மேலும் பலர் தடுப்புக்காவலில் இருந்தபோது சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன் பல்வேறு ஆவணங்களில் கையெழுத்திடுமாறு வற்புறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த காலத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் பலரைச் சந்தித்தது. அதுமாத்திரமன்றி மரணதண்டனைக் கைதிகளுடனும் சந்திப்புக்களை மேற்கொண்டது. அவர்களில் பெருமளவானோர் தாம் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு சில மாதங்களின் பின்னரே நீதிமன்ற மருத்துவ அதிகாரியிடம் அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் எதிர்கொண்ட சித்திரவதைகள் தொடர்பில் நீதிமன்ற மருத்துவ அதிகாரியிடம் எதுவும் கூறக்கூடாது என்று தடுப்புக்காவல் அதிகாரிகள் தம்மை மிரட்டியதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதே வேளை நீதிமன்ற மருத்துவ அதிகாரிகளும் தமிழ்க்கைதிகளுடன் சீராகப்பேசவோ அல்லது கேள்விகளைக் கேட்கவோ இல்லை. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் சட்டத்தரணிகளை நாடுவதற்கோ அல்லது வேறு வழிகளில் சட்ட உதவிகளைப் பெறுவதற்கோ வசதியுடையவர்களாக இருந்தார்களா என்பது கேள்விக்குரிய விடயமாகும். “

அது மாத்திரமன்றி அவர்களுடைய வழக்கு விசாரணைகள் பெரும்பாலும் சிங்களமொழி மூலம் இடம்பெற்றமையினால், அதுகுறித்து பெருமளவிற்கு அறியாதவர்களாகவே இருந்தார்கள் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த 16 பேர் அண்மையில் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களில் 7 பேரின் தண்டனைக்காலம் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஜுன் மாதத்துடன் முடிவடைய இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

விடுதலையான அரசியல் கைதிகள் தண்டனைக்காலத்தை விடவும் அதிகமான காலத்தைத் தடுப்புக்காவலில் செலவிட்டுள்ளனர்! அம்பிகா சற்குணநாதன் ! | Tamil Leader | We Lead the Nation