Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

யானைக் குட்டி பிடிக்கச் சென்ற இராணுவ அதிகாரிக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

T

The Leader Desk

ஜூன் 28, 2021 • 6:08 AM

யானைக் குட்டி பிடிக்கச் சென்ற இராணுவ அதிகாரிக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மின்னேரிய ​தேசிய பூங்காவில் யானைக் குட்டியொன்றை கடத்திச் சென்றது சம்பந்தமாக வன சீவராசிகள் திணைக்களம் கெகிராவ நீதவான் நீதிமன்றத்தில் விளக்கமளித்ததன் பின்பு குறித்த அதிகாரியை இன்று (28) நீதிமன்றத்தில ஆஜராகுமாறு கெக்கிராவ நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
  • மேஜர் ஜெனரல் வாகனத்தை இராணுவ முகாமிற்குள் செலுத்திய பின்னர் பின்னால் வந்த வன பாதுகாப்பு அதிகாரிகள் அந்த வாகனத்தில் யானைக் குட்டியொன்று இருப்பதாக அங்கு காவலுக்கு நின்ற அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.
  • மேற்படி வாகனங்களை பின்தொடர்ந்து சென்ற வேளையில் பின்னால் வந்த இராணுவ வாகனங்களிலிருந்து இறங்கிய இராணுவ அதிகாரிகள் வன பாதுகாப்பு அதிகாரிகளை தாக்கி அச்சுறுத்தியதாகவும், பொலிஸார் வந்த பின்னர் அவர்கள் விலகிச் சென்றதாகவும் தெரிய வருகிறது.
எழுத்து அளவு:

மின்னேரிய ​தேசிய பூங்காவில் யானைக் குட்டியொன்றை கடத்திச் சென்றது சம்பந்தமாக வன சீவராசிகள் திணைக்களம் கெகிராவ நீதவான் நீதிமன்றத்தில் விளக்கமளித்ததன் பின்பு குறித்த அதிகாரியை இன்று (28) நீதிமன்றத்தில ஆஜராகுமாறு கெக்கிராவ நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் வன பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், மின்னேரிய தேசிய பூங்காவில் சட்ட விரோதமாக யானைக் குட்டியொன்றை சிலர் பிடிக்க முயற்சி செய்வதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் வீதித் தடை போட்டு வாகனங்களை பரிசோதிக்கும் போது பூங்காவிலிருந்து ளெியில் வந்த இரு வாகனங்கள் தடையையும் மீறி சென்றதாகவும், அவை இராணுவத்திற்கு சொந்தமான வாகனங்கள் என அடையாளம் கண்டதாகவும் கூறினர்.

மேற்படி வாகனங்களை பின்தொடர்ந்து சென்ற வேளையில் பின்னால் வந்த இராணுவ வாகனங்களிலிருந்து இறங்கிய இராணுவ அதிகாரிகள் வன பாதுகாப்பு அதிகாரிகளை தாக்கி அச்சுறுத்தியதாகவும், பொலிஸார் வந்த பின்னர் அவர்கள் விலகிச் சென்றதாகவும் தெரிய வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களிடம் விளக்கமளித்த இராணுவ செய்தியாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன, மேற்படி சம்பவம் தொடர்பில் சந்தேகிக்கப்படும் அனுராதபுரம் 21வது படை தலைமையகத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் மொஹான் ரத்நாயக ஹபரனயிலிருந்து அனுராதபுத்திற்கு வந்து கொண்டிருக்கும் போது வன சீவராசிகள் திணைக்களத்தின் இரு வாகனங்கள் பின்னால் வந்துள்ளன.

மேஜர் ஜெனரல் வாகனத்தை இராணுவ முகாமிற்குள் செலுத்திய பின்னர் பின்னால் வந்த வன பாதுகாப்பு அதிகாரிகள்  அந்த வாகனத்தில் யானைக் குட்டியொன்று இருப்பதாக அங்கு காவலுக்கு நின்ற அதிகாரிகளிடம் கூறியுள்ளனர். என்றாலும், பொய் குற்றம் சுமத்தியதால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக சம்பந்தப்பட்ட மேஜர் ஜெனரல் ஹபரன பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகக் கூறிய இராணுவ ஊடக செய்தியாளர்  இதன் போது எந்தவொரு நபரும் தாக்கப்படவில்லையெனவும் கூறுகிறார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...