Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

இன்று முதல் மட்டக்களப்பில் வர்த்தக நிலையங்களை திறக்க முடியும்! அரசாங்க அதிபர்

T

The Leader Desk

ஜூன் 28, 2021 • 5:52 AM

இன்று முதல் மட்டக்களப்பில் வர்த்தக நிலையங்களை திறக்க முடியும்! அரசாங்க அதிபர்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆனால் ஆலயங்கள் மற்றும் அனைத்து மதஸ்தானங்களில் ஆராதனைகள், உற்சவங்கள் இடம்பெறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • இதேவேளை இன்று காலையில் இருந்து மாலை 9 மணிவரை அனைத்து வர்த்தக நிலையங்களும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி 9 மணிக்கு பின்னர் திறந்திருக்கும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • கொரோனா தடுப்பு செயலணியுடன் இடம்பெற்ற கலந்துரையடல் தொடர்பாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே கணவதிப்பிள்ளை கருணாகரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

ஆனால் ஆலயங்கள் மற்றும் அனைத்து மதஸ்தானங்களில் ஆராதனைகள், உற்சவங்கள் இடம்பெறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பு செயலணியுடன் இடம்பெற்ற கலந்துரையடல் தொடர்பாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே கணவதிப்பிள்ளை கருணாகரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, சுகாதார அமைச்சின் சுற்றறிக்கையின்படி எந்தவிதமான ஆலய உற்சவங்கள் மற்றும் விழாக்கள் ஆகியவை இடம்பெற தடை விதிக்கப்பட்டுள்ளது

இந்த நடைமுறை சுகாதார அமைச்சினால், சுற்றறிக்கை மறுபரிசீலனை செய்யும் வரை நடைமுறையில் இருக்கும்.

இதேவேளை இன்று காலையில் இருந்து மாலை 9 மணிவரை அனைத்து வர்த்தக நிலையங்களும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இதன்படி 9 மணிக்கு பின்னர் திறந்திருக்கும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் வர்த்தக உரிமையாளர்கள் வர்தக நிலையம் திறந்திருக்கும் நேரம் கண்டிப்பாக சுகாதார அறிவுறுத்தலை பேணி, நுகர்வேரை அதிகமாக உள்வாங்காது முககவசம் கண்டிப்பாக அணிந்திருக்கவேண்டும் என்பதுடன் கை கழுவுவதற்கு ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும்.

இந்த செயற்பாடுகளை மேற்கொள்ளாத வர்த்தகநிலைய உரிமையாளர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...