Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

திறமையாக செயற்படாத அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவர்! ஜனாதிபதி

T

The Leader Desk

ஜூன் 27, 2021 • 10:44 AM

திறமையாக செயற்படாத அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவர்! ஜனாதிபதி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்ள ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிய வருகிறது.
  • தற்போது நிதியமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
  • திறமையாக செயற்படாத அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவார்கள் அல்லது முக்கியத்துவமற்ற பதவிகள் வழங்கப்படலாம் என அரச உள்ளக தகவல்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்ள ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிய வருகிறது.

திறமையாக செயற்படாத அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவார்கள் அல்லது முக்கியத்துவமற்ற பதவிகள் வழங்கப்படலாம் என அரச உள்ளக தகவல்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

திறமையின்மைக்கு அப்பால் சில அமைச்சர்கள் ஊழல் மற்றும் தவறான நடத்தை குறித்த பாரதூரமான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர்.

இதேவேளை அமெரிக்காவில் இருந்து அவசரமாக நாடு திரும்பிய பசில் ராஜபகஷ பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்கவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் பசில் அமைச்சரானதும் வாழ்க்கை செலவு அதிகரிப்பினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிற்கு நிவாரணம் வழங்குவது குறித்த திட்டங்களை வகுப்பதே முக்கியமான பணியாக அமையும் என சிரேஸ்ட அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது நிதியமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நீண்ட இழுபறிக்கு மத்தியில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துள்ளார். பதவியேற்றதும் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை அரசியல் மட்டத்தில் பெரிதும் பேசப்பட்டது. இதனையடுத்து அரசாங்க மட்டத்தில் பல அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணமுள்ளன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ரணில் விக்ரமசிங்கவும் இடையில் சுமுகமான இணக்கப்பாடுகள் சில எட்டப்பட்ட பின்னணிலேயே ரணில் நாடாளுமன்றம் வந்துள்ளதாக பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம் செய்ய சில நாட்களுக்கு முன்னர் பிரமதர் மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...