Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

விடுதலையான அரசியல் கைதி சந்திரபோஸ் செல்வச்சந்திரன் தீடீர் மரணம்!

T

The Leader Desk

ஜூன் 27, 2021 • 9:59 AM

விடுதலையான அரசியல் கைதி சந்திரபோஸ் செல்வச்சந்திரன் தீடீர் மரணம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • யாழ்.புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட 41 வயதான சந்திரபோஸ் செல்வச்சந்திரன் என்பவரே இவ்வாறு மயக்கமுற்று விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
  • இவர் 2006ம் ஆண்டு பயங்கரவாதத் தடைப்பிரிவினரால் கைது செய்யப்பட்டு 14 ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டு கடந்த வருடம் கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
  • இது தொடர்பில் சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு 14 வருடங்கள் வழக்கு நடைபெற்ற பின்னர், அவர் நிரபராதியென கடந்த வருடம் 2019ம் ஆண்டு மார்கழி மாதம் 18ம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

யாழ்.புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட 41 வயதான சந்திரபோஸ் செல்வச்சந்திரன் என்பவரே இவ்வாறு மயக்கமுற்று விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இவர் 2006ம் ஆண்டு பயங்கரவாதத் தடைப்பிரிவினரால் கைது செய்யப்பட்டு 14 ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டு கடந்த வருடம் கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

2006 ம் ஆண்டு மார்கழி மாதம் முதலாம் திகதி கொழும்பு ,கொள்ளுபிட்டி பித்தலை சந்தியில் அப்போதைய பாதுகாப்பு செயலாளரான கோட்டபாய ராஜபக்ஸவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தற்கொலை குண்டுதாரியால் நடாத்தப்பட்ட தாக்குதலில் மூன்று இராணுவ பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மரணத்தை விளைவித்ததுடன், பாதுகாப்பு செயலாளரான கோட்டபாய ராஜபக்ஸ, இராணுவ பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொது மக்களுக்கு கடும் காயங்களை ஏற்படுத்தியதுடன், அரச சொத்துக்களுக்கு பெரும் சேதம் விளைவித்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இது தொடர்பில் சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு 14 வருடங்கள் வழக்கு நடைபெற்ற பின்னர், அவர் நிரபராதியென கடந்த வருடம் 2019ம் ஆண்டு மார்கழி மாதம் 18ம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...