Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

துமிந்தவின் விடுதலையானது 'கைதிகளின் மனித உரிமை மீறலாகும்'!

T

The Leader Desk

ஜூன் 27, 2021 • 9:01 AM

துமிந்தவின் விடுதலையானது 'கைதிகளின் மனித உரிமை மீறலாகும்'!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரசியல் தொடர்பு மற்றும் பண பலத்தின் அடிப்படையில் துமிந்த சில்வா விடுவிக்கப்பட்டுள்ளதை எதிர்ப்பதாக, கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது.
  • அரசியலமைப்பின் 34ஆவது பிரிவின் கீழ் இலங்கை ஜனாதிபதிகள் மன்னிப்பு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக, கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவரான சட்டத்தரணி சேனக பெரேரா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
  • கொலை குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட துமிந்த சில்வாவின் விடுதலையை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா ஆகிய கண்டித்துள்ளன.
எழுத்து அளவு:

அரசியல் தொடர்பு மற்றும் பண பலத்தின் அடிப்படையில் துமிந்த சில்வா  விடுவிக்கப்பட்டுள்ளதை எதிர்ப்பதாக, கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது.

"ஒரு கைதியை விடுவிப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை, ஆனால் ஒரு நபரின் சிவில் அந்தஸ்து, பண பலம், அதிகாரம் அல்லது அரசியல் தொடர்பு ஆகியவற்றின் அடிப்படையில் நாங்கள் அதை எதிர்க்கிறோம்."

 "துமிந்த சில்வா விடுதலை மற்றும் நியாயத்தின் மந்தநிலை" என்ற தலைப்பில்  கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை குற்றவாளி என்பதோடு, மரண தண்டனை விதிக்கப்பட்ட, பாதுகாப்பு அமைச்சின்  முன்னாள் மேற்பார்வை உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த சில்வா பொசன் போயா தினத்தை முன்னிட்டு விடுவிக்கப்பட்ட நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளூர் மற்றும் சர்வதேசத்தின் எதிர்ப்புகளை எதிர்கொண்டுள்ளார்.

அரசியலமைப்பின் 34ஆவது பிரிவின் கீழ் இலங்கை ஜனாதிபதிகள் மன்னிப்பு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக, கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவரான சட்டத்தரணி சேனக பெரேரா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு அவர் பல எடுத்துக்காட்டுகளை முன்மொழிந்துள்ளார்.

"மரண தண்டனை விதிக்கப்பட்ட, மில்ரோய் பெர்னாண்டோவின் மனைவி, சமன் தேவாலாயத்தின் பஸ்நாயக்க  நிலமே அன்டன் தென்னகோன், ரோயல் பார்க் வழக்கின் ஜூட் ஜெயமஹ மற்றும் மிருசுவில் படுகொலையின் சுனில் ரத்நாயக்க ஆகியோர் ஜனாதிபதியின் மன்னிப்பின் காரணமாக நியாயமற்ற முறையில் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.”

ஜனாதிபதியின் மன்னிப்பு அதிகாரம் அரசியலமைப்பிலிருந்து அகற்றப்பட வேண்டும் அல்லது சில சுயாதீன அதிகார அமைப்பின் ஊடாக மேற்பார்வை செய்யப்பட வேண்டும் என கடந்த காலத்தில் ஒரு சமூக விவாதம் ஆரம்பமானதாக சுட்டிக்காட்டியுள்ள சட்டத்தரணி,  ஏனெனில் ஜனாதிபதியின் இந்த அநியாய சர்வாதிகாரம் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

துமிந்த சில்வா வழக்கை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ள பின்னணியில், அனைத்தையும் புறந்தள்ளுவதன் ஊடாக, நீதிமன்ற உத்தரவுகள் பயனற்றவை என பொது மக்கள் அவநம்பிக்கைக் கொள்ள அதிகம் வாய்ப்புள்ளதாகவும் சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.

"சட்டத்தின் ஆட்சியைப் பேணுவதில் நீதித்துறை செயலற்ற நிலையில் இருப்பது மிகவும் ஆபத்தானது."

துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை அரசியல் பழிவாங்கல் என விளக்கமளித்து யாராவது பொதுமக்களை தவறாக வழிநடத்த முயன்றால், அது ஒரு ஜனநாயக நடைமுறை அல்ல என  கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு வலியுறுத்தியுள்ளது.

"இலங்கையின் வரலாற்றை அவதானிக்கையில், அதிகாரத்திற்கு வந்த ஆட்சியாளர்கள் அரசியல் பழிவாங்கல் என்ற சொல்லின் ஊடாக தங்கள் நண்பர்களையும் உறவினர்களையும் மகிழ்விக்கும் பணிகளை செய்து வருகின்றனர்” 

எனவே, 'துமிந்த ஒரு மனிதர்' என்ற கொள்கைக்கு பதிலாக, கைதிகள் மனிதர்கள் என்ற கொள்கைக்கு அமைய, 25,000ற்கும் மேற்பட்ட கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை கட்டமைப்பில், நிவாரணம் வழங்குவதன் அவசியத்தை, கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு வலியுறுத்தியுள்ளது.

கொலை குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட துமிந்த சில்வாவின் விடுதலையை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா ஆகிய கண்டித்துள்ளன.

கைதிகள் எதிர்ப்பு

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் குழு  நாட்டில் அமைந்துள்ள  இரண்டு சிறைகளில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைதிகள் தமக்கு தீர்ப்பளிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியால் விசேட மன்னிப்பு வழங்கப்பட்டதை அடுத்து, மஹர மற்றும் வெலிக்கட சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் குழு உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளது.

வெலிகடை சிறைச்சாலையின் கூரையின் மீதேறி கைதிகள் குழு ஒன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

துமிந்தவின் விடுதலையானது 'கைதிகளின் மனித உரிமை மீறலாகும்'! | Tamil Leader | We Lead the Nation