Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

பசிலுக்காக பதவி விலகும் ஜயந்த வீரசிங்க அவுஸ்திரேலியாவுக்கு!

T

The Leader Desk

ஜூன் 25, 2021 • 6:29 AM

பசிலுக்காக பதவி விலகும் ஜயந்த வீரசிங்க அவுஸ்திரேலியாவுக்கு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரசாங்க உள்வட்டார தகவளின்படி, சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியலின் உறுப்பினரான ஜனாதிபதி சட்த்தரனி ஜயந்த வீரசிங்க நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவுள்ளதால் அந்த இடத்திற்கு பசில் ராஜபக்ச நியமிக்கப்படவுள்ளார்.
  • ஜனாதிபதி சட்டத்தரனி ஜயந்த வீரசிங்க கொழும்பு ராஜகீய கல்லூரியின் பழைய மாணவராவார்.அவர் பின்னர் கொழும்பு சட்ட பீடத்தில் நுழைந்து 1976 இல் சட்டத்தரனியாக பட்டம் பெற்றார்.
  • அவர் 2010 இல் ஜனாதிபதி சட்டத்தரனியாக பதவியேற்றார்.
  • அவர் மேலும் கூறியதாவது: பசிலின் அரசியல் கடந்த காலங்களில் நாடாளுமன்றத்திற்கு வெளியே நடந்து வருகிறது.
எழுத்து அளவு:

அரசாங்க உள்வட்டார தகவளின்படி, சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியலின் உறுப்பினரான ஜனாதிபதி சட்த்தரனி ஜயந்த வீரசிங்க நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவுள்ளதால் அந்த இடத்திற்கு பசில் ராஜபக்ச நியமிக்கப்படவுள்ளார்.

ராஜினாமா செய்யும் ஜயந்த வீரசிங்க அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதி சட்டத்தரனி ஜயந்த வீரசிங்க கொழும்பு ராஜகீய கல்லூரியின் பழைய மாணவராவார்.அவர் பின்னர் கொழும்பு சட்ட பீடத்தில் நுழைந்து 1976 இல் சட்டத்தரனியாக பட்டம் பெற்றார்.

அவர் 2010 இல் ஜனாதிபதி சட்டத்தரனியாக பதவியேற்றார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் அவர் ராஜபக்சர்களின் சட்ட பங்களிப்பாளர்களில் ஒருவராக இருந்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் சட்ட ஆலோசகராகவும் ஜனாதிபதி சட்டத்தரனி ஜயந்த வீரசிங்க பணியாற்றியுள்ளார்.

முகமது பலீல் மர்ஜான்

cDA5H3VE 400x400

இதற்கிடையில், சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினறும் தொழிலதிபருமான மொஹமட் பலீல் மர்ஜானும் பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க ஆர்வம் காட்டியதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தி லீடரிடம் தெரிவித்தார்.

தொழிலதிபரான மொஹமட் பலீல் மர்ஜான் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பராவார்.

ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் முன்னாள் அமைச்சரும் சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க உள்ளதாக பலவெகு ஜன ஊடகங்கள் மற்றும் பொதுஜன பெரமுனவின் ஊடக அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக, சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் பசில் ராஜபக்ஷ சார்பு அரசாங்க ஆர்வலர் 'தி லீடர்' வலைத்தளத்திடம், நாட்டை நெருக்கடியிலிருந்து காப்பாற்றத் தேவையான சக்திவாய்ந்த அமைச்சு பதவிகளை பசில் ராஜபக்ஷ பொறுப்பேற்கக்கூடும் என்று கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:

பசிலின் அரசியல் கடந்த காலங்களில் நாடாளுமன்றத்திற்கு வெளியே நடந்து வருகிறது. பசில் ராஜபக்ஷவின் அரசியல் வாழ்க்கை எப்போதும் நாடாளுமன்றத்திற்கு வெளியே இருக்கும் என்று அர்த்தமில்லை. எல்லாவற்றிற்கும் ஒரு திட்டவட்டமான நேரம் உள்ளது. அந்த திட்டவட்டமான நேரம் எதிர்காலத்தில் வரும்.

“இந்த நாட்டின் முற்போக்கான மக்கள் அவரை நாடாளுமன்றத்திற்கு வரச் சொல்லும் நாள் விரைவில் வரும். எண்ணெய் விலைகள் உயரும் நேரத்தில் அரசாங்கத்தில் ஒரு முக்கியமான அமைச்சு பதவியை வகிக்காததன் விளைவுகளை ஒரு நாடு அனுபவித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

கும்பல்களின் நடனமாடாத ஒரு கட்சியாக சிறீலங்கா பொதுஜன பெரமுனவை நிறுவுவதற்கு அவரது தொலைநோக்கு பார்வையும் பொருளாதாரத்தைப் பற்றிய அறிவுமே முக்கிய காரணமாகும்.

அது மட்டுமல்லாமல், ராஜபக்ஷர்களுக்காக இந்த நாட்டின் முற்போக்கான மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் பராமரிக்கக்கூடிய சுறுசுறுப்பான ராஜபக்சர்களில் அவர் முன்னணியில் உள்ளார்.

அதன்படி, அவர் நாடாளுமன்றத்திற்கு வந்து நாட்டை நெருக்கடியிலிருந்து காப்பாற்ற தேவையான சக்திவாய்ந்த அமைச்சு பதவிகளை ஏற்றுக்கொள்வார். ஆனால் அவை அனைத்தும் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் நிகழும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பசிலுக்காக பதவி விலகும் ஜயந்த வீரசிங்க அவுஸ்திரேலியாவுக்கு! | Tamil Leader | We Lead the Nation