Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

ஜனாதிபதி அவர்களே இந்த நாட்டுக்கு எதை மிச்சம் வைத்துள்ளீர்கள்! ஹிருணிக்கா

T

The Leader Desk

ஜூன் 25, 2021 • 5:00 AM

ஜனாதிபதி அவர்களே இந்த நாட்டுக்கு எதை மிச்சம் வைத்துள்ளீர்கள்! ஹிருணிக்கா

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பொசொன் போயா தினமான நேற்று மரண தண்டனை கைதி துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
  • உங்களின் இந்த தீர்மானத்தினால் இன்று எங்கள் தாய் நாட்டிற்கு சட்டம் ஒன்று இல்லாமல் போயுள்ளது.
  • “ஒரு நாடு ஒரு சட்டம் என்ற தலைப்பின் கீழ் நீங்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றீர்கள்.
எழுத்து அளவு:

பொசொன் போயா தினமான நேற்று மரண தண்டனை கைதி துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

“ஒரு நாடு ஒரு சட்டம் என்ற தலைப்பின் கீழ் நீங்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றீர்கள். அந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் சில தற்போது உறுதியாகியுள்ளது.

தான் நினைத்​ததை போன்று குற்றவாளிகளை ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிப்பதென்றால் சட்டம் மற்றும் நீதிபதிகள் எதற்கு இருக்கின்றார்கள்? உங்களின் இந்த தீர்மானத்தினால் இன்று எங்கள் தாய் நாட்டிற்கு சட்டம் ஒன்று இல்லாமல் போயுள்ளது. இன்று நாட்டை ஆட்சி செய்யும் நீங்கள் (ஜனாதிபதி) அல்ல என்பதனை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.

நான் வணங்கும் பௌத்த மதத்திற்கு ஏற்ப நான் துமிந்த சில்வாவுக்கு மன்னிப்பு வழங்கி விட்டேன். எனினும் உங்களுக்கு புதிதாக பிறந்த பேரக்குழந்தை எதிர்காலத்தில் உங்கள் தொடர்பில் பெருமையாக பேசுவதற்கு என்ன விடயத்தை மீதமாக வைத்துள்ளீர்கள்?

தனது தந்தை, தற்போதைய பிரதமரான மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதற்காக அர்ப்பணிப்புகளை செய்ததுடன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்காக அர்ப்பணிப்புகளை செய்த ஒருவர் என்பதனை தெளிவுப்படுத்த விரும்புகின்றேன்” என அவர் தனது கடிதத்ததில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஜனாதிபதி அவர்களே இந்த நாட்டுக்கு எதை மிச்சம் வைத்துள்ளீர்கள்! ஹிருணிக்கா | Tamil Leader | We Lead the Nation