Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

உன்னை அடித்து கொலை செய்து குளத்தில் போட்டுவிடுவோம் என்று கூறி ஊடகவியலாளரின் மகனை தாக்கியுள்ளனர்!

T

The Leader Desk

ஜூன் 24, 2021 • 3:51 PM

உன்னை அடித்து கொலை செய்து குளத்தில் போட்டுவிடுவோம் என்று கூறி ஊடகவியலாளரின் மகனை தாக்கியுள்ளனர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இது தொடர்பில் குறித்த ஊடகவியலாளர் பளை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் பொலீஸார் விசாணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
  • இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது- கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி கிராமத்தில் வசித்து வரும் ஊடகவியலாளர் ஒருவரின் 12 வயது மகன் (ஆண்) சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுப்படுகின்ற நபர்களால் தாக்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
  • கடந்த 21ஆம் திகதி அன்று மாலை 3.00மணியளவில் பளை முல்லையடி கிராமத்தில் உள்ள அம்மன் ஆலய பொங்கல் நிகழ்வின் போது இடம்பெற்றதாக ஊடகவியலாளர் தெரிவித்திருந்தார்.
  • இது குறித்து கருத்து தெரிவித்த ஊடகவியலாளர்- “எனது மகனை கைகளாலும், கால்களாலும் அடித்து மோட்டார் சைக்கிளால் இடிப்பதற்கும் முற்பட்டுள்ளனார்.
எழுத்து அளவு:

இது தொடர்பில் குறித்த ஊடகவியலாளர் பளை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் பொலீஸார் விசாணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது- கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி கிராமத்தில் வசித்து வரும் ஊடகவியலாளர் ஒருவரின் 12 வயது மகன் (ஆண்) சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுப்படுகின்ற நபர்களால் தாக்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 21ஆம் திகதி அன்று மாலை 3.00மணியளவில் பளை முல்லையடி கிராமத்தில் உள்ள அம்மன் ஆலய பொங்கல் நிகழ்வின் போது இடம்பெற்றதாக ஊடகவியலாளர் தெரிவித்திருந்தார்.

மேலும் பளை பகுதியில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக தான் செய்தியறிக்கையிட்டு வருவதாகவும் இது தொடர்பாக பல செய்திகள் ஆதாரத்துடன் வெளிப்படுத்த முயற்சிகள் எடுத்து வருகின்ற நிலையில் பல அச்சுறுத்தல்கள் தமக்கு வந்ததாகவும் அதை பொருட்படுத்தாமல் தனது கடமையை தான் தொடர்ந்து வந்த நிலையில் தனது மகன் முல்லையடி அம்மன் ஆலயத்தில் பொங்கல் விழாவிற்காக சென்ற போது இனந்தெரியாத சிலரால் காரணம் இன்றி தாக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த ஊடகவியலாளர்- “எனது மகனை கைகளாலும், கால்களாலும் அடித்து மோட்டார் சைக்கிளால் இடிப்பதற்கும் முற்பட்டுள்ளனார்.

இதன் போது அவர்கள் உன்னை அடித்து கொலை செய்து குளத்தில் போட்டுவிடுவோம், உனது அப்பா கமராவ தூக்கிட்டு வந்து செய்தி எடுப்பார் என்றும் கொலை அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக பளை பொலிசாரிடம் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலதிக விசாரனைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்“என தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...