Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

தடுப்புக் காவல் கைதிகளுக்கு வழங்கப்படும் சகல வசதிகளையும் அஹ்னாப் ஜசீமிற்கு வழங்க உத்தரவு!

T

The Leader Desk

ஜூன் 24, 2021 • 12:17 PM

தடுப்புக் காவல் கைதிகளுக்கு வழங்கப்படும் சகல வசதிகளையும் அஹ்னாப் ஜசீமிற்கு வழங்க உத்தரவு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மாத்திரமல்ல, அவரது கவிதை சம்பந்தமாக முன்வைக்கப்பட்டுள்ள சாட்சியங்களுடன் எதிர்வரும் 29ம் திகதி நீதிமன்றத்தில் தோற்றி நிற்குமாறு பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • அஹ்னாப் ஜசீமை சிறைக்கு அனுப்புவதற்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, இது சம்பந்தமாக அவரது குடும்பத்திற்கோ, சட்டத்தரணிகளுக்கோ அறிவிக்கப்படாமையால் அவர் கடுமையான மன உளைச்சலுக்குள்ளாகியிருப்பதாக அவரது சட்டத்தரணிகள் கூறினர்.
  • பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் அன்றைய தினம் நீதிமன்றத்திற்கு வந்திருக்காததனால், பிரதிவாதியின் கோரிக்கையின்படி, ஜூன் 29ம் திகதி வழக்கை ஒத்திவைத்து அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

மாத்திரமல்ல, அவரது கவிதை சம்பந்தமாக முன்வைக்கப்பட்டுள்ள சாட்சியங்களுடன் எதிர்வரும் 29ம் திகதி நீதிமன்றத்தில் தோற்றி நிற்குமாறு பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அஹ்னாப் ஜசீமை சிறைக்கு அனுப்புவதற்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, இது சம்பந்தமாக அவரது குடும்பத்திற்கோ, சட்டத்தரணிகளுக்கோ அறிவிக்கப்படாமையால் அவர் கடுமையான மன உளைச்சலுக்குள்ளாகியிருப்பதாக அவரது சட்டத்தரணிகள் கூறினர்.

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இலங்கைக்கு எதிராக பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டு  ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு  (CTID)  அஹ்னாப் ஜசீம் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கு பின்பு அவரது உறவினர்களுக்கோ சட்டத்தரணிகளுக்கோ அறிவிக்காமல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தடுப்புக் காவலில் வைத்துள்ளது.

கவிஞர் அஹ்னாப் ஜசீமுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீவிரவாதத்துடனான தொடர்பு சம்பந்தமான குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்வதாக சுய வாக்குமூலமொன்றை பலவந்தமாக பெறும் நோக்கில், ஒரு வருட காலத்திற்கும் மேலாக பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவில் தடுத்து வைத்து மானசீக ரீதியில் துன்புறுத்தப்பட்டதாக அவரது சட்டத்தரணிகள் கடந்த செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் 7 (1) உறுப்புரையின் கீழ் சந்தேக நபரான கவிஞரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டியிருந்த போதிலும், அவரை சட்டத்தின் 7 (2) உறுப்புரையின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாகவும், முதலாவது உறுப்புரையின் கீழ் அவரை ஆஜர்படுத்தியிருந்தால் சாட்சிகள் கிடைக்காது என்பதால், கவிஞரை விடுதலை செய்ய சட்டமா அதிபர் தீர்மானிக்கும் பட்சத்தில் கிடைக்கும் நிவாரணத்தை தடுப்பதற்காக வேறொரு உறுப்புரையின் கீழ் அவரை ஆஜர்படுத்தியுள்ளதாகவும சட்டத்தரணிகள் குறிப்பிடுகின்றனர்.

கவிஞர் அஹ்னாப்  ஜசீம் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் எழுதிய கவிதைகளையும்  அவரது குர்ஆனையும் அவர் விடுதலை செய்யப்படும் போது வழங்குவதற்காக அவற்றை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு அல்லது சிறைச்சாலை திணைக்களத்திற்கு உத்தரவிடுமாறு சட்டத்தரணிகள் நீதிமன்றத்திடம் கோரியுள்ளனர்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் அன்றைய தினம் நீதிமன்றத்திற்கு வந்திருக்காததனால், பிரதிவாதியின் கோரிக்கையின்படி, ஜூன் 29ம் திகதி வழக்கை ஒத்திவைத்து அன்றைய தினம்  நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...