Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

மூன்றாவது நீதிபதி ரிஷார்ட் வழக்கில் இருந்து விலகினார்! கிரியெல்லவின் பதில்

T

The Leader Desk

ஜூன் 23, 2021 • 5:03 PM

மூன்றாவது நீதிபதி ரிஷார்ட் வழக்கில் இருந்து விலகினார்! கிரியெல்லவின் பதில்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நவாஸ் மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவினர் முன் உச்சநீதிமன்றத்தில் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
  • இதன் விளைவாக, உச்சநீதிமன்றம் இந்த வழக்கை எதிர்வரும் ஜூலை 6 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
  • இந்த மனுக்கள் மே 28 அன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ​​மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவின் உறுப்பினராக இருந்த உச்சநீதிமன்ற நீதிபதி ஜனக் டி சில்வாவும் தனிப்பட்ட காரணங்களுக்காக மனுவை விசாரிப்பதில் இருந்து விலகினார்.
  • மேலும், ஜூன் 4 ம் திகதி மனுக்கள் விசாரணைக்குக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவில் இருந்த உச்சநீதிமன்ற நீதிபதி யசந்த கோதாகொட நீதிமன்றத்தில், தனிப்பட்ட காரணங்களுக்காக மனுவை விசாரிப்பதில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.
எழுத்து அளவு:

இந்த மனுக்களை ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்தனர், தாங்கள் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானது என்று அவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர் வழக்கு விசாரனை ப்ரீத்தி பத்மான் சூரசேன, ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவினர் முன் உச்சநீதிமன்றத்தில் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மூன்று நீதிபதிகள்கொண்ட குழுவின் உறுப்பினர் நீதிபதி ஏ.எச்.எம்.டி நவாஸ், தனிப்பட்ட காரணங்களுக்காக மனுக்களை பரிசீலிப்பதில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.

இதன் விளைவாக, உச்சநீதிமன்றம் இந்த வழக்கை எதிர்வரும் ஜூலை 6 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

அதன்படி, இந்த மனுக்களை விசாரிப்பதில் இருந்து விலகிய மூன்றாவது உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி நவாஸ் ஆவார்.

முன்னதாக, உச்சநீதிமன்ற நீதிபதிகளான ஜனக் டி சில்வா மற்றும் யசந்த கோதாகொட ஆகியோரும் தனிப்பட்ட காரணங்களுக்காக மனுக்களை விசாரிப்பதில் இருந்து விலகினர்.

இந்த மனுக்கள் மே 28 அன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ​​மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவின் உறுப்பினராக இருந்த உச்சநீதிமன்ற நீதிபதி ஜனக் டி சில்வாவும் தனிப்பட்ட காரணங்களுக்காக மனுவை விசாரிப்பதில் இருந்து விலகினார்.

மேலும், ஜூன் 4 ம் திகதி மனுக்கள் விசாரணைக்குக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவில் இருந்த உச்சநீதிமன்ற நீதிபதி யசந்த கோதாகொட நீதிமன்றத்தில், தனிப்பட்ட காரணங்களுக்காக மனுவை விசாரிப்பதில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிராக பேராயர் மல்கம் கார்டினல் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாமல் ஒரு மாதத்திற்கும் மேலாக சிஐடியால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

unnamed 14

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக விசாரிப்பதற்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (பி.டி.ஏ) கீழ் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில் பொது பாதுகாப்பு அமைச்சர், ஐ.ஜி.பி, சி.ஐ.டி பணிப்பாளர், சி.ஐ.டி-க்கு பொறுப்பான சிரேஸ்ட டி.ஐ.ஜி, சி.ஐ.டி யின் ஓ.ஐ.சி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்

 சட்டத்தரணி கவுரி சங்கரி தவரசாவின் அறிவுறுத்தலின் பேரில் மனுதாரருக்கு ஜனாதிபதி சட்டத்தரணி ஃபைஸர் முஸ்தபா ஆஜரானார்.

மனுதாரர் ரிஷாத் பதியுதீன் தனது மனுவில் ஏப்ரல் 24 காலை தனது வீட்டிற்குள் நுழைந்த சிஐடி அதிகாரிகள் குழுவினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

தனது மனுவில், ரிஷாத் பதியுடீன், கொலோசஸ் (பிரைவேட்) லிமிடெட் என்ற நிறுவனத்துடனான தனது உறவை கேள்விக்குட்படுத்த விரும்புவதாகக் கூறினார், அங்கு அவரை சிஐடி அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் சிஐடியால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்பிறகு தனது சகோதரரும் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டதற்கு எந்த நியாயமும் இல்லை என்று கூறிய ரிஷாத் பதியுதீன், சிறுபான்மை அரசியல் கட்சியின் தலைவரான தன்னை தர்மசங்கடத்திற்குள்ளாக்கவும் பழிவாங்கவும் முயன்றதாக குற்றம் சாட்டினார்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களில் எந்தவொரு தொடர்பும் தனக்கு இல்லை என்று அவர் மறுத்துள்ளார்.

அதன்படி, சிஐடியால் கைது செய்யப்பட்டிருப்பதானது தனது அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என தீர்ப்பு வழங்குமாறும் நிபந்தனையின்பேரில் தன்னை விடுவிக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும் ரிஷாத் பதியுதீன் உச்ச நீதிமன்றத்தை கோரியுள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சியின் பிரதான கொரடா லக்ஷ்மன் கிரியெல்ல, மனு விசாரணையில் இருந்து நீதிபதிகள் விலகியுள்ளதாக தெரிவித்தார்.

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

மூன்றாவது நீதிபதி ரிஷார்ட் வழக்கில் இருந்து விலகினார்! கிரியெல்லவின் பதில் | Tamil Leader | We Lead the Nation