Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

ரத்ன தேரர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்க மறுப்பு!

T

The Leader Desk

ஜூன் 21, 2021 • 9:30 AM

ரத்ன தேரர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்க மறுப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற மூன்று மாதங்களுக்குப் பின்னர் தனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வார் என்ற கட்சி ஒப்பந்தத்தின்படி, அவரை பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு கட்சி கோரியது.
  • குறிப்பாக கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலதிற்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்திருந்போதும் அவர் அந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
  • எனினும் அப்பிடி எந்தவொரு உடன்படிக்கையும் இல்லை என தெரிவித்து அதுரலிய ரத்ன தேரர் பதவியை துறக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற மூன்று மாதங்களுக்குப் பின்னர் தனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வார் என்ற கட்சி ஒப்பந்தத்தின்படி, அவரை பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு கட்சி கோரியது.

எனினும் அப்பிடி எந்தவொரு உடன்படிக்கையும் இல்லை என தெரிவித்து அதுரலிய ரத்ன தேரர் பதவியை துறக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள எங்கள் மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் சுசந்த கொடித்துவக்கு, நாடாளுமன்றத்தில் ரத்ன தேரரின் நடத்தை குறித்து கட்சி மிகவும் ஏமாற்றமடைந்துள்ளதாக கூறினார்.

குறிப்பாக கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலதிற்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்திருந்போதும் அவர் அந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தாகவும் அவர் குற்றம் சுமத்தினார். இதேபோலவே எரிபொருள் விலை உயர்வு சர்ச்சையை எடுத்து எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில சம்பந்தப்பட்ட, கட்சியின் நிலைப்பாட்டிற்கு மாறாக ரத்ன தேரர் செயற்பட்டதாகவும் சுசந்த கொடித்துவக்கு குறிப்பிட்டார்.

ஞானசார தேரரை நாடாளுமன்றத்திற்குள் நுழைய அனுமதிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ரத்ன தேரரை விலகுமாறு தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுத்ததாகவும் அவர் தெரிவித்தார். இவ்வாறான நிலையில் கட்சியைச் சேர்ந்த எவரும் தன்னை அழைக்கவில்லை என்றும் இது தொடர்பாக தனக்கு ஒரு கடிதமும் அனுப்பவில்லை எனவும் அதுரலிய ரத்ன தேரர் கூறியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ரத்ன தேரர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்க மறுப்பு! | Tamil Leader | We Lead the Nation