Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

கப்பலில் தீப்பிடித்து ஒரு மாதமாகிவிட்டது! மீன்பிடி போராட்டத்திற்கு சென்ற புபுதுவை பொலீசார் துரத்துகிறார்கள்!

T

The Leader Desk

ஜூன் 20, 2021 • 4:23 PM

கப்பலில் தீப்பிடித்து ஒரு மாதமாகிவிட்டது! மீன்பிடி போராட்டத்திற்கு சென்ற புபுதுவை பொலீசார் துரத்துகிறார்கள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எக்ஸ்பிரஸ் பர்ள் கப்பல் தீப்பிடித்து இன்றோடு ஒரு மாதம் நிறைவு பெறுகிறது.
  • மாத்திரமல்ல, எரிபொருள் விலையேற்றம் காரணமாக மீனவ மக்கள் மேலும் கஷ்டத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.
  • மீனவ குடும்பங்களுக்கு 5000 ரூபாய் வழங்குவதாகச் சொன்னாலும் பெருமபாலான குடும்பங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை.
எழுத்து அளவு:

எக்ஸ்பிரஸ் பர்ள் கப்பல் தீப்பிடித்து இன்றோடு ஒரு மாதம் நிறைவு பெறுகிறது. இந்த ஒரு மாத காலத்தில் மீனவ மக்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், பிடிக்கும் மீன்களை மக்கள் விலைக்கு வாங்காத நிலையும் ஏற்பட்டுள்ளது. மாத்திரமல்ல, எரிபொருள் விலையேற்றம் காரணமாக மீனவ மக்கள் மேலும் கஷ்டத்தில் தள்ளப்பட்டுள்ளனர். என்றாலும்  அரசாங்கம் மீனவ மக்களுக்கு இதுவரை எந்த நிவாரணமும் வழங்கவில்லை. மீனவ குடும்பங்களுக்கு 5000 ரூபாய்  வழங்குவதாகச் சொன்னாலும் பெருமபாலான குடும்பங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை.

இந்த அனைத்து காரணிகளாலும் இன்னலுக்காளாகியிருக்கும் கம்பஹ, புத்தளம், கொழும்பு  மீனவ மக்களோடு சேர்ந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்ததோடு, கொழும்பு பாலத்துறை லுனுபொக்குன மீனவ கிராமத்தில்  மாற்றத்திற்கான இளைஞர்கள் அமைப்பினால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. என்றாலும் அவ்விடத்திற்கு வந்த பாலத்துறை பொலிஸார் ஆர்ப்பாட்டத்திற்கு  இடையூறு செய்து, தனிமைப்படுத்தல் சட்டம் மீறப்பட்டதாகக் கூறி அங்கிருந்த முன்னிலை சோஷலிஸக் கட்சியின் கல்விச் செயலாளர் உட்பட சிலரை கைது செய்ய முயன்றுள்ளனர்.

கடந்த காலத்தில் ஆறுமுகம் தொண்டமானின் மரண வீடு தொடங்கி சமீத்தில் நடந்த இத்தாகந்த சத்தாதிஸ்ஸ தேரரின் தாயாரினது மரண வீடு வரை  தனிமைப்படுத்தல் சட்டத்தை வௌிப்படையாகவே மீறியதை காணக் கூடியதாக இருந்தது.  அந்த நிகழ்வுகளுக்கு எதிராக சட்டத்தை செயற்படுத்தாத பொலிஸ், தமக்கு நேர்ந்துள்ள அநீதிக்கு எதிராக நடத்தும் ஆர்ப்பாட்டங்களுக்கு இடையூறு செய்வது ஏனென லுனுபொக்குன மீனவ மக்கள் கேட்கிறார்கள்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...