Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

மாடு எடுத்துச் சென்ற மூவர் திரிபுராவில் அடித்துக் கொலை!

T

The Leader Desk

ஜூன் 20, 2021 • 12:58 PM

மாடு எடுத்துச் சென்ற மூவர் திரிபுராவில் அடித்துக் கொலை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த சம்பவம் குறித்து கொவாய் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கிரண் குமார் பிடிஐ முகமையிடம் விளக்கமளித்திருக்கிறார்.
  • "இன்று (20 ஜூன் 2021 ஞாயிற்றுக்கிழமை) காலை சுமார் 4.30 மணிக்கு, ஒரு சிறிய வேன் வாகனத்தில், ஐந்து மாடுகளோடு மூன்று பேர் அகர்தலா நோக்கிச் செல்வதை திரிபுரா மாநிலத்தில் இருக்கும் நமன்ஜாய்புரா கிராம மக்கள் கண்டார்கள்" என காவல் துறை கண்காணிப்பாளர் கிரண் குமார் கூறினார்.
  • காவலர்கள் தப்பி ஓடியவரும், மகாராணிபூர் கிராமத்துக்கு அருகில் உள்ள முங்கியாகாமி என்கிற குக்கிராமத்தில் சிக்கினார்.
  • கொல்லப்பட்டவர்கள் ஜயீத் ஹுசைன் (வயது 30), பிலால் மியா (வயது 28), சைஃபுல் இஸ்லாம் (வயது 18) என அடையளம் காணப்பட்டு இருக்கிறது இவர்கள் மூவரும் செபாஹிஜாலா மாவட்டத்தில் சொனாமுரா என்கிற நகரத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

இந்த சம்பவம் குறித்து கொவாய் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கிரண் குமார் பிடிஐ முகமையிடம் விளக்கமளித்திருக்கிறார்.

"இன்று (20 ஜூன் 2021 ஞாயிற்றுக்கிழமை) காலை சுமார் 4.30 மணிக்கு, ஒரு சிறிய வேன் வாகனத்தில், ஐந்து மாடுகளோடு மூன்று பேர் அகர்தலா நோக்கிச் செல்வதை திரிபுரா மாநிலத்தில் இருக்கும் நமன்ஜாய்புரா கிராம மக்கள் கண்டார்கள்" என காவல் துறை கண்காணிப்பாளர் கிரண் குமார் கூறினார்.

"கிராமத்தினர் மாடுகள் கடத்தப்பட்டு கொண்டு செல்வதாக எண்ணி அவ்வாகனத்தை வடக்கு மகாராணிபூர் கிராமத்தில் வைத்து மடக்கியுள்ளனர்.

அவ்வாகனத்தில் இருந்த மூவரையும் கிராமத்தினர் பயங்கர ஆயுதங்களால் அடித்து நொறுக்கியுள்ளனர். கிராமத்தினரின் தாக்குதலில் இருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். ஒருவர் மட்டும் எப்படியோ சமாளித்து தப்பி ஓடியுள்ளார்.

காவலர்கள்

தப்பி ஓடியவரும், மகாராணிபூர் கிராமத்துக்கு அருகில் உள்ள முங்கியாகாமி என்கிற குக்கிராமத்தில் சிக்கினார். அந்த நபரையும் கிராமத்தினர் கொன்றுவிட்டனர்" என காவல் துறை கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.

"சம்பவம் நடந்த இடத்துக்கு காவல் துறையினர் சென்று, மூவரையும் அகர்தலா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அந்த மூவரும் மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கு முன்பே இறந்துவிட்டார்கள் என்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்" என காவல் துறை கண்காணிப்பாளர் கிரண் குமார் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வழக்கை பதிவு செய்து விசாரித்து வருவதாக கூறியுள்ளார் அவர். ஆனால் இதுவரை யாரும் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்படவில்லை என்பதையும் காவல் துறை கூறியுள்ளது.

கொல்லப்பட்டவர்கள் ஜயீத் ஹுசைன் (வயது 30), பிலால் மியா (வயது 28), சைஃபுல் இஸ்லாம் (வயது 18) என அடையளம் காணப்பட்டு இருக்கிறது இவர்கள் மூவரும் செபாஹிஜாலா மாவட்டத்தில் சொனாமுரா என்கிற நகரத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...